Latest posts
More Posts

ஜெயமுள்ள தேவவார்த்தை (Episode 2)






இடுக்கமான வாசல் - Narrow gate
ஜெயமுள்ள தேவவார்த்தை (Episode 2)
By : JR Benedict

ஜெயமுள்ள தேவவார்த்தை (Episode 01)






வசனம் கிடைக்காத பஞ்சம் | famine of the words of the Lord | ஜெயமுள்ள தேவவார்த்தை |JR Benedict

இயேசுவுக்காக தான் பாடு படுகிறோமா?? - 02


1. இடறல் அற்றவர்களாய் இருத்தல்

“நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்பரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல்செய்கிறேன்.”  (பிலிப்பியர் 1:11)

கிறிஸ்தவத்திற்கு எதிரான எதிர்ப்பு சூழ்நிலையில் எம் கண்களுக்கு அதிகம் புலப்படாதது இந்த விடயம். காரணம் நாம் நமக்கோ, நம்முடைய திருச்சபைக்கோ ஒரு பிரச்சினை வருகையில் பெரும்பாலும் நாம் கலங்கி சூழ்நிலை மேலும் சந்தர்ப்பங்கள் மேலும் பழி போடுகிறவர்களாக இருக்கிறோம்.

ஆனாலும் சமூக சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளின் பிரதி நடவடிக்கை தான் பல நேரங்களில் எதிர்ப்பு சூழலாக மாறி உள்ளது என்பதை மறந்து போகிறோம்.

ஒரு குட்டி கதை மூலமாக பார்த்தோமானால்,

 தகப்பன் தன் இரு குமாரரையும் நன்றாக படிக்கும் படி கூறி விட்டு அவர்கள் பரீட்சை பெறுபேறுகளை பார்த்து பரிசளிப்பதாக கூறிவிட்டு வெளீயூர் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் தன்னால் முடிந்த வரை நன்றாக படிக்கிறான். ஒழுங்காக தனக்கு கொடுக்கப்பட்ட கடைமைகளை நிறைவேற்றுகிறான்.

 ஆனால் மற்றவனோ நல்ல சத்தமாக பாடல்கள் கேட்டு விளையாடி கூத்தடிக்கிறான். ஆனாலும் குறிப்பிட்ட அளவு நேரத்தில் தனக்கு நியமிக்கப்பட்ட பாடத்தை படித்தும் முடிக்கிறான்.


 ஆனாலும் அவர்களது பக்கத்து வீட்டு காரர்கள் அதிக சத்தம் இடைஞ்சல் உண்டாக்கியதால் பொறுமையிழந்து அவர்களது வீட்டை நோக்கி வருகிறார்கள். 


வருகிறவர்களில் சிலர் அந்த பகுதியில் ரவுடித்தனம் செய்கின்ற வாலிபர்கள். இடைஞ்சல் உருவாக்கிய உங்களுக்கு பரீட்சை வரை நாங்கள் இடைஞ்சல் தருகிறோம் என சொல்லி அவர்களை இம்சிக்கிறார்கள்.


 வீட்டிற்குள் கல்லெறிவதும் அதிக வசனிப்புக்களால் இரவில் கத்துவதும் என இடைஞ்சலை ஏற்படுத்துகிறார்கள்.


 இப்போது அந்த தகப்பன் வருகிறார் ரவுடித்தனம் செய்கின்ற வாலிபர்கள் விலகி கொள்கின்றனர். ஆனாலும் அயல் வீட்டார் முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். 


மேலே கூறப்பட்ட கதையே திருச்சபை நிலை இருவருமே தகப்பன் கூறியதை நிறைவேற்றுகிறார்கள் பாருங்கள். ஆனால் இரண்டாவது மகனோ இடறலுண்டாக்கியே தனது காரியத்தை செய்கிறான். அதையும் தாண்டி அவர்களுக்கு தொல்லையும் கொடுக்கிறான்.

ஆனாலும் அவன் மனநிலையை யோசித்து பார்த்தால் “நான் எனது தகப்பன் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். ஆனால் எனக்கு ஏன் இந்த நிலை?” என்று தான் கேட்டு கொண்டு இருப்பான்.

இது தான் இந்த சூழ்நிலையில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலை.

பிலிப்பியர் துப்புரவானவர்களாக மட்டுமல்ல இடறலற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என பவுல் விண்ணப்பிக்கிறார். இடறலற்றவர்களுமாய் என்பதை மற்றவர் இடற நாம் காரணமாக இருக்க கூடாது என்பதற்கு என்பது தான் சிறப்பான விளக்கம் எனலாம்.

 எனவே எப்பொழுதும் செய்யும் காரியங்கள் (நல்லவைகளாக தோன்றுவது கூட) (ரோமர் 14:16) மற்றவர்கள் இடற காரணமாக இருக்கிறதா? என சிந்திக்க வேண்டும். நாம் பேசுகின்ற விதம் பழகுகின்ற விதம் (விசேஷமாக ஆண்கள் பெண்களுடன்) எமது பழக்க வழக்கங்கள் இவற்றை ஆராய்ந்து அவை மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்கின்றதா? என சிந்திப்போம்.

உள்ளான பரிசுத்தத்தை துப்புரவும் வெளியான பரிசுத்தததை (பிறர் எம்மில் காண்பதும்) இடறலும் வெளிப்படுததுகிறது. நாம் உள்ளும் புறம்பும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

பிலிப்பியர் அன்பிலே பெருக வேண்டும் என்றும் நீதியின் கனிகளால் நிரம்பி கிறிஸ்துவின் நாளில் துப்புரவானவர்களும், இடறலற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என பவுல் கூறுகிறார்.

இப்படியான சந்தர்ப்பங்களில் வருகின்ற எதிர்ப்புகளுக்கு நாம் காரணமில்லாமல் தவிர்க்கலாம். நாமே உண்டான எதிர்ப்புக்கு காரணமாக இருந்து விட்டு அதை அறியாமல் இருப்பது நல்லதல்ல.

“மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப் படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.” (ரோமர் 14:21)

இயேசுவுக்காக தான் பாடு படுகிறோமா??


“ நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு?  நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.”  (1 பேதுரு 2:20)

இன்று கிறிஸ்தவர்கள், ஊழிய வாழ்க்கை என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் பலர் சோதனைகள் என்ற பகுதியை கட்டாயம் பல தருணங்களில் கடந்து வந்து இருப்போம். இந்த இடத்தில பார்த்தால் வேதனை எதிர்ப்பு வரும் பாதி பேர் குற்றம் செய்தே அடிபடுகிறவர்களாய் இருக்கிறோம்.

 ஒவ்வொரு வரும் எம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப, சபை சூழல் எல்லாவற்றிலும் பிரச்சினைகளை, சோதனைகளை, அவமானங்களை, மற்றவரின் கசப்புணர்வுகளை எதிர்நோக்கி கொண்டு இருக்கிரவர்களாக இருப்போம்.

இந்த பாடுகள் எல்லாம் இயேசுவுக்காகவா படுகிறோம்.. இல்லை????? இயேசுவின் கட்டளைகளை மீறி விட்டு பாடுகளுக்கு பொய்யாக இயேசுவை கை காட்டுகிறோமா???

பவுல் எழுதிய பிலிப்பியரில் இருந்து சில விடயங்களை அலசலாம் என்று இருக்கிறேன்.

பிலிப்பியர் அல்லது பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் என்னும் நூல் வேதாகமத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினொன்றாவதாகவும், பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஆறாவதாகவும் அமைந்துள்ளது.

இது கி.பி. சுமார் 55 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் கருத்து உண்டு.

இலங்கையில் கிறிஸ்தவத்திற்கு எதிரான எதிர்ப்பு சூழ்நிலையில் சபை முன்னேற பிலிப்பியரில் இருந்து நாம் பிரயோகிக்க கூடிய கொள்கைகள் அல்லது கோட்பாடுகள் என்ற தலைப்பில் சில விடயங்களை குறித்து அலசுவோம்.


 முக்கிமாக எதிர்ப்பு சூழ்நிலை என்பது எப்படியான சூழ்நிலையில் வருகின்றது என்பதை நாம் ஆராய்வதில் இருந்து தொடரலாம்.


தொடரும்.. 

உங்கள் நண்பர்கள் உங்களை சிநேகிக்க வேண்டுமா???

  • உங்கள் அன்பு உண்மை உள்ளதை இருக்கட்டும். 
  • ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள். 
  • உங்களை விட மற்றவர்களை உயர்வானவர்களாக கனம்பண்ணி நடவுங்கள். 
  • உபசரிப்பதை வழமையாக கொள்ளுங்கள். 
  • உங்களிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள். 
  • ஒருவரோடு ஒருவர் மனமொத்து வாழுங்கள். 
  • தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நட்புறவு கொள்ளுங்கள். 
  • நீங்கள் தற்பெருமை கொள்ளாதிருங்கள். 
  • தீமைக்கு பதில் நன்மை செய்யுங்கள். 
  • முடிந்தவரை எல்லாருடனும் சமாதானமாய் இருங்கள். 
(ரோமர் 12)

நீதியின் அடிமைகள்......

நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, பாவத்தில் பிணைக்கப்பட்ட ஒரு அடிமையாய் இருந்தீர்கள். நீங்கள் பாவம் செய்ய விரும்பவில்லையாயினும், இதற்கு மாறாக எதையும் செய்ய முடியாதவர்களாய் இருந்தீர்கள்.




தேவன் உங்களை விடுவித்த போது, பாவத்தில் இருந்து உங்களை விடுவித்தார். ஆனாலும் நீங்கள் ஒரு அடிமையாகவே இருந்தீர்கள். இப்போது பாவத்தில் பிணைக்கப்பட்டவர்களாய் இல்லாமல் நீதியில் பிணைக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், தேவனை கனப்படுத்துகிற காரியங்களைச் செய்யவே எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.

கிறிஸ்து தங்களை விடுதலையாக்கிய பிறகு, தாங்கள் விரும்புகிற எதையும் செய்ய தங்களுக்கு சுதந்திரம் உண்டு என்று சிலர் நம்புகிறார்கள். இது சரியல்ல. பவுல் கிறிஸ்துவை பின்பற்ற ஆரம்பித்து, கிறிஸ்துவின் ஒரு "பிணைக்கைதியாக" மாறிய பின்பு, அவருடைய வாழ்க்கை அவருக்கு சொந்தமாக இருந்ததில்லை என்று அவர் உணர்ந்தார் (ரோமர் 1 :1).இப்போது பாவத்திற்கு அடிமையாக இல்லாமல் தேவனுக்கும் அவருடைய நீதிக்கும் அவர் அடிமையாக இருந்தார். மக்கள் அவரை இழிவாக நடத்திய போது தன்னுடைய இயற்கையான உணர்ச்சிகளிலிருந்து அவர்களுக்கு பதிலளிக்கிற உரிமையை இழந்து, ஒரு நீதியான பதிலைக் கொடுக்க தூண்டப்பட்டார். அவர் சோதிக்கப்பட்ட போது தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கவில்லை. வேலை செய்கிற இடத்திற்குள் நுழைந்து சுயநலமாக செயற்பட அவரால் முடியவில்லை. நீதியின் ஒரு அடிமையாக தன்னுடைய தலைவரை கனப்படுத்தும் வண்ணமாக ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழும்படி அவர் எதிர்பார்க்கப்பட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

நீதியான வாழ்க்கை வாழ்வது ஒரு கிறிஸ்தவன் தெரிந்து கொள்கிற விருப்பம் அல்ல. அல்லாமலும் அவசரமாக செய்யப்படுகிற முடிவும் அல்ல. தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் இது கட்டாயமாக இருக்கிறது. கிறிஸ்துவில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரம், நாம் விரும்புவதைச் செய்வதற்கான சுதந்திரம் அல்ல, இது நாம் நீதியாக வாழும்படி கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு சுதந்திரமாகும். நாம் பாவத்தில் பிணைக்கப்பட்டிருக்கிற போது இவ்வாறு நம்மால் வாழ முடியவில்லை. நாம் நீதியான வாழ்க்கை வாழும்படி நமக்கு இப்போது சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், நாம் ஒரு பரிசுத்தமான, புனிதமான வாழ்க்கை வாழும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்யும்படி அவரை அனுமதிக்க வேண்டும் (1 யோவான் 3 :7).

"பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்." ரோமர் 6:18

இது உங்கள் ஞானம்...

www.ceylonchristian.com
ஞானம் என்பது உலகத்தை குறித்து நீங்கள் அறிவுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதல்ல; மாறாக தேவனை நீங்கள் எவ்வாறு அறிந்திருக்கிறீர்கள் என்பதே ஆகும். மானிட அறிவு உங்களை  ஞானமுள்ளவர்களாக்காது. இது ஒரு வேளை தேவனுடைய வழிகளை ஒதுக்கி தள்ள உங்களை வழிநடத்தும் (1 கொரிந்தியர் 1:18 -25). ஒரு தேசத்தை தனக்காக சிருஷ்டிக்கும்படியான தேவனுடைய நோக்கம், தன்னுடைய  ஞானத்தை, தன்னுடைய பிள்ளைகளின் கீழ்படிதல் மூலம் வெளிப்படுத்துவதாக இருந்தது (சகரியா 8 :23). இஸ்ரவேலர்கள் தேவனை பின்பற்றிய போது தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்; தேவனுக்கு கீழ்படிந்ததன் ஞானம் எல்லாவற்றிலும் வெளிப்பட்டது. 

உங்களுடைய வாழ்க்கையை அவருடைய ஞானத்தின் ஆதாரத்தில் நடத்தும்படி அதே வாய்ப்புகளை தேவன் உங்களுக்கு தருகிறார். அவிசுவாசிகள் அந்த முடிவுகளை எடுக்கும் போது அவர்களுடைய சொந்த அறிவு, புரிந்து கொள்ளுதலின் ஆதாரத்தில் எடுக்கிறார்கள். கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி இருக்கிறது. உங்களை வழி நடத்துவதற்கு தேவனுடைய ஆவியானவர் உங்களில் இருக்கிறார் (யோவான் 16 : 13). தேவனுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் காரியங்களை பார்க்கும் பொருட்டு சத்தியங்களின் உண்மையை நீங்கள் பார்க்கும்படி உங்கள் கண்களை பரிசுத்த ஆவியானவர் திறப்பார். தேவன் ஒருவரே வருங்காலத்தை பார்க்கிறார். ஆகவே இன்று நீங்கள் சரியான முடிவுகளை எடுக்கும்படி அவர் மட்டுமே உங்களை தெளிவாக வழிநடத்த முடியும்.  
 
www.ceylonchristian.com
உங்களுடைய வாழ்க்கையை நடத்தும்படி நீங்கள் தேவனை அனுமதிக்கும் போது, உங்களை சுற்றியுள்ளவர்கள் உண்மையான ஞானத்தை பார்ப்பார்கள். உலக ஞானத்தை அல்ல; தேவனுடைய ஞானத்தை பார்ப்பார்கள். நம்முடைய தாறுமாறான உலகத்தில் எதைச் செய்வது என்பதை குறித்து பிறர் குழப்பமடைவார்கள். ஆனால் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்கும்படி தேவன் உங்களை பாதுகாப்பாக வழிநடத்துவார். நீங்கள் ஞானமான தீர்மானங்களை எடுப்பதால் உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு ஞானமுள்ள ஆலோசகராய் இருப்பதால் உங்களுடைய உதவியை தேடி உங்கள் நண்பர்கள் வருவார்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடய வழிகாட்டியாய் இருக்கும்படி அனுமதிக்கிற ஞானத்தை, உங்களுடைய கீழ்ப்படிதலிலுள்ள வாழ்க்கை வெளிப்படுத்திக் காட்டும்..

"ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்." ( உபாகமம் 4:6)

(அனுதினமும் தேவனை அனுபவித்தல்) 
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved