குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் இன்றைய தினம் இது (ஒக்டோபர் 1 ஆம் திகதி) கொண்டாடப்படுகிறது. எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதோடு இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
அதோடு இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்த நாளிலே நினைவுகூறப்படும். ஏனெனில் சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டுவந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை. பல காரியங்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு வன்முறையாளர்களாக வருவதற்கான சாத்தியமே உண்டு.
சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். பல சிறார்கள் இன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடினாலும், நாம் அறியாத பல சிறு உள்ளங்கள் வேதனையிலும், கஷ்டத்திலும், சித்திரவதைகளிலும் தங்கள் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான சிறுவர்களை நாம் இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பது நம் கடமையாக இருக்கின்றது.
அதே போல தான் முதியவர்களும், அவர்களும் கடைசிக் காலங்களில் அன்பை எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடைசி அத்தியாயத்தில் இருப்பவர்கள். ஆகவே இவர்களை நேசிக்கவும், மதிக்கவும் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்... (முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல்...I தீமோத்தேயு 5:1-2)
வேதாகமத்தில் ஒரு இடத்தில் இயேசுக்கிறிஸ்து இவ்வாறு சொல்கிறார். "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது". இயேசுக் கிறிஸ்து சிறுவர்களை நேசித்தார் என்பதை இச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. சிறுவர்கள் நேசிக்கப் படவேண்டியவர்கள். ஆகவே அவர்களை அவர்களாகவே வாழவிட வேண்டும்.
சர்வதேச சிறுவர் தினம் - June 1
பொதுவான உலக சிறுவர் தினம் - November 20