இயேசுவுக்காக தான் பாடு படுகிறோமா?? - 02


1. இடறல் அற்றவர்களாய் இருத்தல்

“நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்பரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல்செய்கிறேன்.”  (பிலிப்பியர் 1:11)

கிறிஸ்தவத்திற்கு எதிரான எதிர்ப்பு சூழ்நிலையில் எம் கண்களுக்கு அதிகம் புலப்படாதது இந்த விடயம். காரணம் நாம் நமக்கோ, நம்முடைய திருச்சபைக்கோ ஒரு பிரச்சினை வருகையில் பெரும்பாலும் நாம் கலங்கி சூழ்நிலை மேலும் சந்தர்ப்பங்கள் மேலும் பழி போடுகிறவர்களாக இருக்கிறோம்.

ஆனாலும் சமூக சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளின் பிரதி நடவடிக்கை தான் பல நேரங்களில் எதிர்ப்பு சூழலாக மாறி உள்ளது என்பதை மறந்து போகிறோம்.

ஒரு குட்டி கதை மூலமாக பார்த்தோமானால்,

 தகப்பன் தன் இரு குமாரரையும் நன்றாக படிக்கும் படி கூறி விட்டு அவர்கள் பரீட்சை பெறுபேறுகளை பார்த்து பரிசளிப்பதாக கூறிவிட்டு வெளீயூர் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் தன்னால் முடிந்த வரை நன்றாக படிக்கிறான். ஒழுங்காக தனக்கு கொடுக்கப்பட்ட கடைமைகளை நிறைவேற்றுகிறான்.

 ஆனால் மற்றவனோ நல்ல சத்தமாக பாடல்கள் கேட்டு விளையாடி கூத்தடிக்கிறான். ஆனாலும் குறிப்பிட்ட அளவு நேரத்தில் தனக்கு நியமிக்கப்பட்ட பாடத்தை படித்தும் முடிக்கிறான்.


 ஆனாலும் அவர்களது பக்கத்து வீட்டு காரர்கள் அதிக சத்தம் இடைஞ்சல் உண்டாக்கியதால் பொறுமையிழந்து அவர்களது வீட்டை நோக்கி வருகிறார்கள். 


வருகிறவர்களில் சிலர் அந்த பகுதியில் ரவுடித்தனம் செய்கின்ற வாலிபர்கள். இடைஞ்சல் உருவாக்கிய உங்களுக்கு பரீட்சை வரை நாங்கள் இடைஞ்சல் தருகிறோம் என சொல்லி அவர்களை இம்சிக்கிறார்கள்.


 வீட்டிற்குள் கல்லெறிவதும் அதிக வசனிப்புக்களால் இரவில் கத்துவதும் என இடைஞ்சலை ஏற்படுத்துகிறார்கள்.


 இப்போது அந்த தகப்பன் வருகிறார் ரவுடித்தனம் செய்கின்ற வாலிபர்கள் விலகி கொள்கின்றனர். ஆனாலும் அயல் வீட்டார் முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். 


மேலே கூறப்பட்ட கதையே திருச்சபை நிலை இருவருமே தகப்பன் கூறியதை நிறைவேற்றுகிறார்கள் பாருங்கள். ஆனால் இரண்டாவது மகனோ இடறலுண்டாக்கியே தனது காரியத்தை செய்கிறான். அதையும் தாண்டி அவர்களுக்கு தொல்லையும் கொடுக்கிறான்.

ஆனாலும் அவன் மனநிலையை யோசித்து பார்த்தால் “நான் எனது தகப்பன் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். ஆனால் எனக்கு ஏன் இந்த நிலை?” என்று தான் கேட்டு கொண்டு இருப்பான்.

இது தான் இந்த சூழ்நிலையில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலை.

பிலிப்பியர் துப்புரவானவர்களாக மட்டுமல்ல இடறலற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என பவுல் விண்ணப்பிக்கிறார். இடறலற்றவர்களுமாய் என்பதை மற்றவர் இடற நாம் காரணமாக இருக்க கூடாது என்பதற்கு என்பது தான் சிறப்பான விளக்கம் எனலாம்.

 எனவே எப்பொழுதும் செய்யும் காரியங்கள் (நல்லவைகளாக தோன்றுவது கூட) (ரோமர் 14:16) மற்றவர்கள் இடற காரணமாக இருக்கிறதா? என சிந்திக்க வேண்டும். நாம் பேசுகின்ற விதம் பழகுகின்ற விதம் (விசேஷமாக ஆண்கள் பெண்களுடன்) எமது பழக்க வழக்கங்கள் இவற்றை ஆராய்ந்து அவை மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்கின்றதா? என சிந்திப்போம்.

உள்ளான பரிசுத்தத்தை துப்புரவும் வெளியான பரிசுத்தததை (பிறர் எம்மில் காண்பதும்) இடறலும் வெளிப்படுததுகிறது. நாம் உள்ளும் புறம்பும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

பிலிப்பியர் அன்பிலே பெருக வேண்டும் என்றும் நீதியின் கனிகளால் நிரம்பி கிறிஸ்துவின் நாளில் துப்புரவானவர்களும், இடறலற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என பவுல் கூறுகிறார்.

இப்படியான சந்தர்ப்பங்களில் வருகின்ற எதிர்ப்புகளுக்கு நாம் காரணமில்லாமல் தவிர்க்கலாம். நாமே உண்டான எதிர்ப்புக்கு காரணமாக இருந்து விட்டு அதை அறியாமல் இருப்பது நல்லதல்ல.

“மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப் படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.” (ரோமர் 14:21)
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved