இது உங்கள் ஞானம்...

www.ceylonchristian.com
ஞானம் என்பது உலகத்தை குறித்து நீங்கள் அறிவுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதல்ல; மாறாக தேவனை நீங்கள் எவ்வாறு அறிந்திருக்கிறீர்கள் என்பதே ஆகும். மானிட அறிவு உங்களை  ஞானமுள்ளவர்களாக்காது. இது ஒரு வேளை தேவனுடைய வழிகளை ஒதுக்கி தள்ள உங்களை வழிநடத்தும் (1 கொரிந்தியர் 1:18 -25). ஒரு தேசத்தை தனக்காக சிருஷ்டிக்கும்படியான தேவனுடைய நோக்கம், தன்னுடைய  ஞானத்தை, தன்னுடைய பிள்ளைகளின் கீழ்படிதல் மூலம் வெளிப்படுத்துவதாக இருந்தது (சகரியா 8 :23). இஸ்ரவேலர்கள் தேவனை பின்பற்றிய போது தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்; தேவனுக்கு கீழ்படிந்ததன் ஞானம் எல்லாவற்றிலும் வெளிப்பட்டது. 

உங்களுடைய வாழ்க்கையை அவருடைய ஞானத்தின் ஆதாரத்தில் நடத்தும்படி அதே வாய்ப்புகளை தேவன் உங்களுக்கு தருகிறார். அவிசுவாசிகள் அந்த முடிவுகளை எடுக்கும் போது அவர்களுடைய சொந்த அறிவு, புரிந்து கொள்ளுதலின் ஆதாரத்தில் எடுக்கிறார்கள். கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி இருக்கிறது. உங்களை வழி நடத்துவதற்கு தேவனுடைய ஆவியானவர் உங்களில் இருக்கிறார் (யோவான் 16 : 13). தேவனுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் காரியங்களை பார்க்கும் பொருட்டு சத்தியங்களின் உண்மையை நீங்கள் பார்க்கும்படி உங்கள் கண்களை பரிசுத்த ஆவியானவர் திறப்பார். தேவன் ஒருவரே வருங்காலத்தை பார்க்கிறார். ஆகவே இன்று நீங்கள் சரியான முடிவுகளை எடுக்கும்படி அவர் மட்டுமே உங்களை தெளிவாக வழிநடத்த முடியும்.  
 
www.ceylonchristian.com
உங்களுடைய வாழ்க்கையை நடத்தும்படி நீங்கள் தேவனை அனுமதிக்கும் போது, உங்களை சுற்றியுள்ளவர்கள் உண்மையான ஞானத்தை பார்ப்பார்கள். உலக ஞானத்தை அல்ல; தேவனுடைய ஞானத்தை பார்ப்பார்கள். நம்முடைய தாறுமாறான உலகத்தில் எதைச் செய்வது என்பதை குறித்து பிறர் குழப்பமடைவார்கள். ஆனால் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்கும்படி தேவன் உங்களை பாதுகாப்பாக வழிநடத்துவார். நீங்கள் ஞானமான தீர்மானங்களை எடுப்பதால் உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு ஞானமுள்ள ஆலோசகராய் இருப்பதால் உங்களுடைய உதவியை தேடி உங்கள் நண்பர்கள் வருவார்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடய வழிகாட்டியாய் இருக்கும்படி அனுமதிக்கிற ஞானத்தை, உங்களுடைய கீழ்ப்படிதலிலுள்ள வாழ்க்கை வெளிப்படுத்திக் காட்டும்..

"ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்." ( உபாகமம் 4:6)

(அனுதினமும் தேவனை அனுபவித்தல்) 
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved