நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, பாவத்தில் பிணைக்கப்பட்ட ஒரு அடிமையாய் இருந்தீர்கள். நீங்கள் பாவம் செய்ய விரும்பவில்லையாயினும், இதற்கு மாறாக எதையும் செய்ய முடியாதவர்களாய் இருந்தீர்கள்.
தேவன் உங்களை விடுவித்த போது, பாவத்தில் இருந்து உங்களை விடுவித்தார். ஆனாலும் நீங்கள் ஒரு அடிமையாகவே இருந்தீர்கள். இப்போது பாவத்தில் பிணைக்கப்பட்டவர்களாய் இல்லாமல் நீதியில் பிணைக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், தேவனை கனப்படுத்துகிற காரியங்களைச் செய்யவே எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.
கிறிஸ்து தங்களை விடுதலையாக்கிய பிறகு, தாங்கள் விரும்புகிற எதையும் செய்ய தங்களுக்கு சுதந்திரம் உண்டு என்று சிலர் நம்புகிறார்கள். இது சரியல்ல. பவுல் கிறிஸ்துவை பின்பற்ற ஆரம்பித்து, கிறிஸ்துவின் ஒரு "பிணைக்கைதியாக" மாறிய பின்பு, அவருடைய வாழ்க்கை அவருக்கு சொந்தமாக இருந்ததில்லை என்று அவர் உணர்ந்தார் (ரோமர் 1 :1).இப்போது பாவத்திற்கு அடிமையாக இல்லாமல் தேவனுக்கும் அவருடைய நீதிக்கும் அவர் அடிமையாக இருந்தார். மக்கள் அவரை இழிவாக நடத்திய போது தன்னுடைய இயற்கையான உணர்ச்சிகளிலிருந்து அவர்களுக்கு பதிலளிக்கிற உரிமையை இழந்து, ஒரு நீதியான பதிலைக் கொடுக்க தூண்டப்பட்டார். அவர் சோதிக்கப்பட்ட போது தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கவில்லை. வேலை செய்கிற இடத்திற்குள் நுழைந்து சுயநலமாக செயற்பட அவரால் முடியவில்லை. நீதியின் ஒரு அடிமையாக தன்னுடைய தலைவரை கனப்படுத்தும் வண்ணமாக ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழும்படி அவர் எதிர்பார்க்கப்பட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
நீதியான வாழ்க்கை வாழ்வது ஒரு கிறிஸ்தவன் தெரிந்து கொள்கிற விருப்பம் அல்ல. அல்லாமலும் அவசரமாக செய்யப்படுகிற முடிவும் அல்ல. தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் இது கட்டாயமாக இருக்கிறது. கிறிஸ்துவில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரம், நாம் விரும்புவதைச் செய்வதற்கான சுதந்திரம் அல்ல, இது நாம் நீதியாக வாழும்படி கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு சுதந்திரமாகும். நாம் பாவத்தில் பிணைக்கப்பட்டிருக்கிற போது இவ்வாறு நம்மால் வாழ முடியவில்லை. நாம் நீதியான வாழ்க்கை வாழும்படி நமக்கு இப்போது சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், நாம் ஒரு பரிசுத்தமான, புனிதமான வாழ்க்கை வாழும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்யும்படி அவரை அனுமதிக்க வேண்டும் (1 யோவான் 3 :7).
"பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்." ரோமர் 6:18