மிஷனரி பணிக்கு சிறுவர்கள் கொடுத்த உதாரத்துவ காணிக்கை

18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த SABBATH SCHOOL- ஐ சேர்ந்த சிறு குழந்தைகள்வெளி தேசங்களில் திருப்பணியாற்றிய மிஷனரிகளுக்கு தங்களால் இயன்ற அளவு உதவி செய்தனர். இந்த SABBATH SCHOOL-ஆனது JAMES WHITE என்பவரால் 1852-ம் வருடம் SEVENTH DAY ADVENTIST சபையினரால் துவங்கப்பட்டது. சனிக்கிழமை ஆராதனைக்கு முன்னதாக நடைபெறும் SABBATH SCHOOL-ல் அநேக பெரியவர்கள்வாலிபர்கள்சிறுவர்கள் பங்கு பெறுவார்கள். 

அந்த வகுப்புகளில் மிஷனரிகளின் சாட்சிகளையும் அவர்களது ஊழிய தேவைகளையும் அறிவிப்பது அந்நாட்களில் வழக்கம். இப்படியாக ஒரு நாள் Mr.HUTCHINGS (1835-ம் வருடம் சிலோன் தேசத்திற்கு மிஷனரியாக சென்று பின்னாட்களில் இந்தியாவில் மிஷனரி ஊழியம் செய்தவர்) என்பவரைக் குறித்து அறிவிக்கையில்,அதைக்கேட்ட சிறுவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு தொகையை சேமித்து அந்த பணத்தை மிஷனரிகளுக்கு அனுப்ப தொடங்கினார்கள். அதிலே குறிப்பிட்ட ஏழு சிறுவர்கள் தாங்கள் எப்படி மிஷனரிகளுக்கு உதவுகின்றோம் என்பதைஇந்தியாவில் மிஷனரியாக பணியாற்றிய Mr.HUTCHINGS கடிதம் மூலமாக தெரிவித்தார்கள். 

முதலாம் சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS 
அவர்களேநீங்கள் சிலோனுக்கும்இந்தியாவுக்கும் சென்று கிறிஸ்துவை அறியா பாமர மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதை கேட்டு மகிழ்கின்றேன். ஒரு வாரத்தில் ஆறு செண்டுகளை என்னால் அனுப்ப முடியும். எப்படியெனில் நான் டீபால்காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து அதினால் சேமிக்கப்படும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்புகிறேன். 
இரண்டாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS 
அவர்களேமிஷனரி பணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு பைகளை தைத்து அதை விற்பதால் எனக்கு சிறிதளவு பணம் கிடைக்கின்றது. இன்னும் அநேக பைகளை தைத்து அதிலிருந்து வரும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்பி வருகிறேன்.
மூன்றாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS 
அவர்களேநான் எனது நண்பர்களும் பல தோட்டங்களை பராமரிப்பு செய்தும்நாங்களே வீட்டில் சிறிய தோட்டம் அமைத்துஅங்கு விளையும் காய் கறிகளை விற்றும் பணத்தை சேமிகின்றோம். அந்த பணத்தை முழுவதும் உங்கள் மிஷனரி பணிக்காக கொடுக்கின்றோம். எங்களால் முடிந்தவரை உழைத்து அதிலிருந்து வரும் பணத்தில் மிஷனரிகளை தாங்குகிறோம்.
நான்காவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS 
அவர்களேஅநேக குழந்தைகள் இயேசுவைப் பற்றி தெரியாமலும்பரிசுத்த வேதாகமம் இல்லாமலும் இருகின்றர்களே. அவர்களுக்கு வேதாகமம் சென்றடைய நாங்கள் எங்கள் பணத்தை சேமித்து அனுப்புகிறோம்.
ஐந்தாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS 
அவர்களேமிஷனரி ஊழியத்திற்கு பணத்தை அனுப்புவது எனது கடமையும் இன்றியமையாததுமாகும். என்னால் சேமிக்ககூடிய ஒரு சென்ட் பணத்தையும் கூட சேமித்து அதை நான் மிஷனரி ஊழியத்திற்காக அனுப்பி வருகிறேன்.
ஆறாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS 
அவர்களேநான் சாக்லேட் வாங்கும் பழக்கத்தை நிறுத்தி அதினால் சேமிக்கப்படும் பணத்தை உங்கள் மிஷனரி ஊழியத்திற்கு அனுப்பி வருகிறே
ன். இன்னும் என்னால் இயன்ற அளவு சேமித்து அனுப்புகிறேன்.
ஏழாவது சிறுவனின் கடிதம்
Mr.HUTCHINGS 
அவர்களேநான் அங்கிருந்து அந்த மக்களுக்கு இயேசுவைக் குறித்து அறிவித்து அவர்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தவேண்டும். இல்லையென்றால் அவ்வாறு நடத்தும் உங்களைப்போன்ற மிஷனரிகளுக்கு உதவி செய்து அவர்கள் பரலோகம் செல்வதற்கு நானும் ஒரு வகையில் உதவ வேண்டும். எனவே என்னால் முடிந்த அளவு பணத்தை சேர்த்து அனுப்பி வருகிறேன்.

மேலே எழுதப்பட்டிருக்கும் கடிதகள் 18 வயதிற்குட்பட்ட சிறுவர் மற்றும் வாலிபர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த சிறுவர்களுக்கு ஒரே வாஞ்சை எப்படியாவதுமிஷனரிகளை தாங்கி கிறிஸ்த்துவை அறியாத பாமர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த சிறுவர்களை பலவிதமான வேலைகளை செய்தும்,தங்களுடைய பழக்க வழக்கங்களை வெறுத்தும் பணத்தை சேர்த்து மிஷனரிகளை தாங்கினார்கள் என்பதை இந்த கடிதங்களிலிருந்து நம்மால் அறிந்து கொள்ளமுடிகின்றது.

தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லைஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் (உபாகமம் 15:11). மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோஅதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு25:40). அவனவன் விசனமாயுமல்லகட்டாயமாயுமல்லதன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்;உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (கொரிந்தியர் 9:7). நாமும் இயன்ற அளவு மிஷனரி ஊழியங்களைநமது காணிக்கைகள் மூலம் தாங்க வேண்டும் என்பதையே அந்த சிறுவர்களின் கடிதங்கள் நமக்கு தெரிவின்கின்றது.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved