பிளவு |
1054 :
இப் பெரிய பிளவானது முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் ஏற்படுத்தியது. உரோம மற்றும் மரபுவழி தேவாலயங்கள் அவர்களது சமய பிணைப்புகளை நீக்கிக்கொண்டது. Cardinal Hambert என்பவர் உரோம் தொடங்கி கொன்ஸ்தாந்துநோபிள் வரை பயணம் செய்து இலத்தீன் தேவாலயங்களினுடைய நடவடிக்கைகளை எதிர்த்தார். கொன்ஸ்தாந்துநோபிள் இன் கிறிஸ்தவ திருச்சபை, சமயகுரு (Patriarch) Michael Cerularius இவரை தகுந்த மரியாதையோடு வரவேற்கவில்லை. Cerularius, ஒன்பவதாவது பாப்பரசர் லியோ இனை புறக்கணித்தார்.
அதே காலத்தில் ஒரு சிறிய பிளவு Photius- Adrian இற்கிடையில் ஏற்பட்டது.
இதுவே ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் கிழக்கத்தய மரபுவழி பழமையினருக்கும் இடையான தொடர்பின் இறுதி கட்டம் ஆகும்
இப்பிரிவானது கொள்கைகள் நிருவாகம் போன்றவற்றிலும் வேறுபாடுகளை ஏற்படுத்தியது. உரோமன் கத்தோலிக்கம் பாப்பரசரை தலைவராகக் கொண்ட குரு மரபை கடுமையாகப் பின்பற்றியது. கிழக்கத்திய மரபுவழி கிளைகள் உள்ளூர் தேசிய தேவாலயங்களாக ஆக மாறியது.
1095 Nov 18 :
பாப்பரசர் முஸ்லிம்களுக்கெதிரான புனிதப்போராட்டம் ஒன்றை நடத்தினார். பாப்பரசர் Urban II clermont சபையைக் கூட்டினார். இதில் முக்கிய
அங்கத்தவர்களாக பிரான்சிய ஆயர்கள் இருந்தார்கள். இப்போராட்டத்தை
முன்னெடுத்தவர்கள் கிழக்கில் முஸ்லிம் விதிகளின் கீழ் இருக்கும்
கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்தனர்.
பாப்பரசர் தலைமையிலான சபை |
1095 :
முதலாவது புனித போராட்டம்
இப் புனிதப் போராட்டமானது பீட்டர் இனால் ஆரம்பிக்கப்பட்டது. இவர் படைகளை திரட்டி கொன்ஸ்தாந்துநோபிள் இற்கு பயணம் செய்தார். 1096 ல் ஆசியாவைக் கடந்தனர். கொன்ஸ்தாந்துநோபிள் இன் சக்கரவர்த்தி Alexius 1 இடம் உதவி கோரினார். 1096 oct 21 இவரது படை துருக்கியர்களினால் அழிக்கப்பட்டது.
1096 :
பாலஸ்தீனத்திற்கு போகும் வழியில் சிலுவைப்போர் வீரர்கள் யூதர்களை படுகொலை செய்தனர்.
1096-1100 Aug :
போராட்டத்தின் இரண்டாவது பகுதி :
ஐந்து போர்வீரர்கள் தலைமையில் இடம்பெற்றது.
1101 :
போராட்டத்தின் மூன்றாவது பகுதி :
இரண்டாவது பாப்பரசர் பச்சல் ஜெருசலேம் ஆட்சிக்காக ஒரு படையைத் திரட்டினார். ஆனால் அவர்கள் நகரை அடையும் முன்பே அந்த படை உடைந்து போனது. எனினும் 1112 இல் மன்னன் பிளட்வின் தனது ஆட்சியை விஸ்தரித்தார். தற்போதய லெபனான் இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏனைய போர்வீரர்களும் மத்திய கிழக்கில் தமது ஆட்சியை நிறுவினர்.
Bernard of clairvaux |
1145 :
பாப்பரசர் இரண்டாவது புனிதப் போர் இற்கு அழைப்பு விடுத்தார்.
Bernard of clairvaux இப் போரினை விடுதலைக்கான குறியாக உறுதிப்படுத்தினர்.
1147-1148 :
இரண்டு போர்வீரர்கள் தலைமையில் படைகள் கிழக்கை நோக்கி பிரிந்து சென்றது.
1. Emperor conrad III ஜேர்மன் இராணுவப் பிரிவிற்கும்,
2. King louis VII பிரான்ஸ் படை பிரிவிற்கும் தலைமை தாங்கினர்.
எனினும் Oct 25 Conrads படை Dorylaeum எனும் இடத்தில் வைத்து துருக்கியர்களால் தோற்கடிக்கப்பட்டது.
1187 July 4 :
ஜெருசலேம் இல் ஏற்பட்ட தோல்வியானது மூன்றாவது புனிதப்போரை ஊக்குவித்தது. ஹட்டின் எனும் இடத்தில் வைத்து முஸ்லிம் சுல்தான் படைகளால் கிறிஸ்தவ படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1170 :
வால்டோ என்பவர் தமது மத பிரசங்கத்தை லயோன் இல் ஆரம்பித்தார்.
இவர் தமது சொத்துக்களையும், பிரசங்கங்களையும் ஏழைகளுக்கு கொடுக்க விரும்பினார். இவரது பிரசங்கத்தை ஆயர்கள் எதிர்த்தனர்.
Pope Innocent III |
1189-1192 May :
மூன்றாவது புனிதப் போராட்டம்.
இதற்கு ரோம பேரரசன் Fredrick Barbarossa தலைமை தாங்கினார். இப்போர் இறுதியில் 1190 ல் ஆசியாவை அடைந்தது. 1192 sep 2 இல் Saldin உடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜெருசலேம் நகரானது தொடர்ந்து முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. Richard, Leopold இனால் சிறை வைக்கப்பட்டிருந்தார். எனினும் குறிப்பிட்ட காலத்தின் பின் Saldin இறந்தார்.
1198 :
நான்காவது புனிதப்போர்
மூன்றாவது பாப்பரசர் இன்னோசென்ட் இனால் புதிய போரிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
The Fourth Crusade is Launched |
1200-1204 :
நான்காவது போரிற்கு Boniface என்பவர் தலைமை தாங்கினார்.
போரின் போது கிழக்கு பேரரசரின் (Isaac II Angelus) சகோதரியை மணந்தார்.
கப்பல்கள் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாத படைகளிடம் அதற்குப்பதிலாக கிறிஸ்தவ நகரத்தை (present-day zaday, hungary) பெற்றுத்தருமாறு கேட்கப்பட்டனர். 1203 இல் போர் வீரர்கள் கொன்ஸ்தாந்துநோபிள் ஐ தாக்கினர்.
Alexius IV பதவியேற்பு
இவர் செய்த சத்தியத்தை காப்பாற்ற தவறியதால் போர்வீரர்கள் நகரை
கொள்ளையிட்டு பிரான்ஸ் பேரரசர் ஐயும் இத்தாலி சமயகுருவையும் தேர்ந்தனர்.