எங்கும் இருக்கிறவர்
காணக்கூடிய நிலையில் பரலோகத்தில் பிதாவும் குமாரனும் (அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக), ஆவியானவரும் (ஏழு அக்கினி தீபங்களாக) இருப்பதை நாம் அறிவோம் (வெளி 4:2.5 ; 5:7). காணக்கூடாத நிலையில் (Invisible) தேவன் (பிதாவும் குமாரனும் ஆவியானவரும்) எங்கும் இருக்கிறார் (Omnipresent - 1 இராஜ 8:27; சங் 139:7-12: மத் 18:20; ஏசா 66:1). தேவனுடைய சரீரம் எங்கும் இருக்கிறது என்பதில்லை (God is not omnibody). ஆனால் அவருடைய பிரசன்னத்தை எங்கும் உணர முடியும். தேவன் மட்டுமே எங்கும் இருக்கிறவர்.
எல்லாம் வல்லவர்
திருத்துவ தேவன் எல்லாம் செய்ய வல்லவர் (ஆதி 17:1; சங் 33:19; வெளி 15:3). ஆனால் அவர் தனது பண்புகளுக்கெதிரானவற்றைச் செய்யமாட்டார். எடுத்துக்காட்டாக தேவன் பொய் சொல்லமாட்டார் (எண் 23:19). தேவன் மட்டுமே எல்லாம் வல்லவர்.
எல்லாம் அறிந்தவர்
கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தேவன் அறிவார் (ரோம 11:33). நமது நினைவுகளையும் நமது வாயில் சொல் பிறவாததற்கு முன்பே நமது சொற்களையும் அறிந்திருக்கிறார் (சங் 139:2-4) என்பதிலிருந்து அவரது அறிவின் மாட்சிமையைச் சற்று உணரலாம். வருங்காலத்தைக் குறித்து, தனது தீர்க்கதரிசிகள் மூலம், சரியாக முன்னறிவிக்கக் கூடியவர் தேவன் ஒருவரே. தேவனுடைய அறிவு மனிதருக்கு எட்டாத அளவிற்கு உள்ளது (சங் 139:6).
ஏனைய பண்புகள்
தேவனுடைய பண்புகள் யாவற்றையும் சொல்லி முடியாது. ஒரு சில பண்புகளை மட்டும் இங்கு காண்போம்.
- தேவன் சதாகலாமுமுள்ளவர் (ஆதி 21:33; யாத் 15:18; 1 நாளா 29:10; சங் 145:13; வெளி 4:9).
- தேவன் ஒருவரே பரிசுத்தர் (வெளி 15:4).
- தேவன் அன்புள்ளவர் (1 யோவா 4:8; யோவான் 3:16).
- நீதியுள்ளவர் (எஸ்றா 9:15; நெகே 9:8; யோபு 37:23; சங் 119:137; ஏசா 53:11; 1 தீமோ 3:16; 1 யோவான் 2:1).
- முற்றிலும் நம்பத்தகுந்தவர் (1 யோவா 1:9; 1 கொரி 10:13; 2 கொரி 1:20).
- வாக்கு மாறாதவர் (எண் 23:19).
- இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமுமுள்ளவர் (யாத் 34:6).
- மன்னிக்கிறவர் (யாத் 34:9).
- அக்கிரமத்தை விசாரிக்கிறவர் (யாத் 34:7 ).
- தண்டனை தருபவர் (உபா 5:11, சங் 34:10).
- நல்லவர் (மத் 5:45; சங் 34:8)
Post a Comment