உண்மையுள்ளவன் !!!

இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள் . (சங்கீதம் 12:1)

நம்முடைய ஆண்டவருடைய கண்கள் உண்மையுள்ளவர்களையே தேடுகிறது. அவர் சிறந்த கல்விமான்களையோ சாதுரியமான பிரசங்கிகளையோ அதிகமாய் படித்தவர்களையோ நோக்கிப்பார்ப்பதில்லை. அவருடைய கண்கள் உண்மையுள்ளவர்களையே தேடுகிறது. உண்மையுள்ளவர்களின் கரங்களில் உத்தரவாதங்களை கொடுக்கிறார். உண்மையுள்ளவர்களை வல்லமையாக பயன்படுத்துகிறார். உண்மையாயிருத்தல் என்பது ஒருநாள் சம்பவிக்கின்ற காரியம் அல்ல. அது அனுதின ஜீவியமாய் இருக்கிறது.

வேதம் கேட்கிறது. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்கா 16:11)

வேதத்தில் அநேக பரிசுத்தவான்களை குறித்து நாம் வாசிக்கும் போது அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதை நாம் அறியலாம். மோசேயைக்குறித்து வேதம் சாட்சி கொடுத்து மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான் என்று சொல்லுகிறது.(எபி 3:5) தாவீதை குறித்து சொல்லும்போது உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் (1 சாமு 2:14) என்று குறிப்பிடுகிறது. தானியேலைக்குறித்தும் அப்படியே வாசிக்கிறோம். அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குறையும் காணப்படவில்லை. (தானி 6:4)

நாம் நம் அருமை ஆண்டவரை நோக்கிப்பார்க்கிறோம். அவர் எத்தனை உண்மையுள்ளவர்! நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர் (1 தெச 5:24). நம்மை ஸ்திரப்படுத்துகிறவர் உண்மையுள்ளவர் (2 தெச 3:3). வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் (எபி 10:2). கர்த்தர் உண்மையும் நீதியுமுள்ளவர் (1 யோவான் 1:9).

தேவபிள்ளையே நீ உண்மையுள்ளவனாயிரு சிறு சிறு காரியமானாலும் பெரிய காரியமானாலும் நீ உண்மையுள்ளவனாயிருப்பாய் என்றால் கர்த்தர் உன்னை அதிகமாய் உயர்த்துவார். அநேகர் தசமபாகங்களை கர்த்தருடைய ஊழியத்துக்காய் கொடுப்பதில்லை. இதனால் எத்தனையோ பல அதிக மடங்கு அதிகமாய் அவர்கள் வைத்தியருக்கு கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. அதிக நஷ்டங்களை அடைய வேண்டியதிருக்கிறது. உக்கிராணக்காரன் உண்மையூள்ளவனாய் காணப்படவேண்டும் (1கொரி 4:2).

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். (நீதிமொழிகள் 28:20)
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved