ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன். (2 சாமுவேல் 22:4)
நம் அருமை ஆண்டவரை எப்போது வேண்டுமென்றாலும் நாம் நோக்கிக் கூப்பிடலாம். எப்போது வேண்டுமென்றாலும் அவருடைய கிருபாசனத்தண்டை கிட்டி சேரலாம். எப்போது வேண்டுமென்றாலும் அவருடைய பொன் முகத்தை நோக்கிப் பார்க்கலாம்.ஏனென்றால் அவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை.
நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை விடுவிப்பார் என்பது தான் தாவீது ராஜாவின் சாட்சியாய் இருந்தது. சிங்கங்களும் கரடியும் அவருக்கு எதிராய் வந்த போது கர்த்தரை அல்லாமல் வேறு யாரை நோக்கிக் கூப்பிடுவது? பெரிய கோலியாத் இஸ்ரவேலரை நடுங்கவைத்துக் கொண்டிருந்த போது தாவீது கர்த்தரை தவிர வேறு யாரையும் நோக்கிக் கூப்பிடவில்லை.! அவர் மனித உதவியை நாடவில்லை அல்லது தன் சுய பலத்தை நம்பி சார்ந்து கொள்ளவில்லை. அவர் சொன்னார் "எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று." (சங்கீதம் 18:6)
தேவபிள்ளையே கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. பிரச்சனை சிறியதோ பெரியதோ போராட்டம் கொடியதோ பயங்கரமானதோ கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. உனக்கு விடுதலை உண்டு. ஏனென்றால் விடுதலையை கர்த்தர் வாக்களித்திருக்கிறார். "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்." (சங்கீதம் 50:15)
கர்த்தர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எத்தனை அருமையானவை. கூப்பிடுகிறதற்கு முன்னமே நான் மறுஉத்தரவு கொடுப்பேன். அவர்கள் பேசும் போதே நான் கேட்பேன் (ஏசாயா 65:24). "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவுகொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." (எரேமியா 33:3)
எசேக்கியா ராஜா வியாதிப்பட்டார். நீர் மரித்துப்போவீர் குடும்ப காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்று ஏசாயா தீர்க்கதரிசி திட்டமும்தெளிவுமாய் கூறிவிட்டார். அந்த நேரத்தில் எசேக்கியா செய்தது என்ன? தம்முடைய முகத்தை சுவர் பக்கமாய் திருப்பி கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். கர்த்தர் உடனே எசேக்கியாவின் ஜெபத்தை கேட்டு அவருடைய ஆயுசில் பதினைந்து வருடங்களை கூட்டிக்கொடுத்தார். நம் கர்த்தர் எவ்வளவு உண்மையுள்ளவர்! ஆம் நம் கர்த்தர் ஜெபத்தை கேட்டு பதிலளிக்கிறவர்.!
வேதம் சொல்லுகிறது "தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்" (சங்கீதம் 145:18). "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." (ஏசாயா 55:6)
தேவபிள்ளையே பலவித போராட்டங்களில் கலங்கி இருக்கின்றாயோ? வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றாயோ? வாழ்க்கையில் கசப்பு அடைந்து இருக்கின்றாயோ? கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. நிச்சயமாகவே உனக்கு பதில் அளித்து உன் கண்ணீரை துடைத்தருளுவார்.
நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். (சங்கீதம் 86:7)

Post a Comment