"நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை." (2 கொரிந்தியர் 4:8)
எங்களுக்கு நெருக்கம் வருகிறது உண்மைதான்: ஆனால் நாங்கள் ஒடுங்கிப்போவதில்லை. கலக்கங்கள் வருகிறது உண்மைதான். ஆனால் மனம் முறிவடைவதில்லை. சோதனை வருவது உண்மைதான். ஆனால் நாங்கள் சோர்ந்து போவதில்லை.
தேவனுடைய பிள்ளைகள் பாடுகளையும் உபத்திரவங்களையும் சந்திக்காமல் இருப்பதே இல்லை. அவைகள் நமக்கு வரத்தான் செய்யும் என்பதை கர்த்தர் முன்கூட்டியே அறிவித்துவிட்டார். இயேசு "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." என்றார்.
சோதனை வரும் என்று நமக்கு முன்னதாகவே தெரிகிறதினால் நாம் அதை சந்திக்க ஆயத்தமாகி விடுகிறோம். சோதனைகளை கடந்து சென்ற கர்த்தர் நமக்கு துணையாய் நிற்கிறார். அவர் தம்முடைய திராணிக்கு மிஞ்சி ஒருபோதும் நம்மை சோதிக்கிறது இல்லை. சோதனைக்கு தப்பும் வழிகளை நமக்கு கொடுக்கிறார்.
இரண்டாவதாக சோதனைகள் தான் நம்மை கிறிஸ்துவைப்போல் மாற்றுகிறது. சோதனை வேளையில் நாம் கிறிஸ்துவை நெருங்கி கிட்டி சேர்கின்றோம். தேவகுமாரனை பாடுகள் எப்படி பூரணத்துக்குள் கொண்டு சென்றதோ அதைப்போல பாடுகளும் சோதனைகளும் கிறிஸ்துவின் சாயலிலே நம்மை மறுரூபமாக்குகிறது.
கர்த்தரிடத்திலிருந்து வரும் சிட்சை கூட நமக்கு ஆசீர்வாதம் தான் அது அவர் நம்மேல் அன்புடையவராய் இருக்கிறார் என்பதை தான் வெளிப்படுத்துகிறது. "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்" (எபிரேயர் 12:6)
மூன்றாவதாக சோதனையின் முலம் கர்த்தர் நம்மை பெரிய வேலைக்கு ஆயத்தப்படுத்துகிறார். சாதாரணமாக அரசாங்கத்தில் ஒருவனை வேலைக்கு அழைத்தால் முதலில் அவன் அதற்கு தகுதியுள்ளவன் தானா? என்று சோதிக்கிறார்கள். உயர்ந்த பதவியை நிர்வகிக்கக்கூடிய திறமை, படிப்பு, புத்தி, விவேகம் இருக்கிறதா என்பதை எல்லாம் கண்டுதான் பதவி உயர்வை அளிக்கிறார்கள். யோசேப்பை பாருங்கள். எவ்வளவுக்கெவ்வளவு அவர் சோதனைகளிலும் பாடுகளிலும் சென்றாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு உயர்வு வந்துகொண்டே இருந்தது. முடிவில் கர்த்தர் பார்வோனுடைய வீட்டில் மிக உன்னதமான ஸ்தானத்தை கொடுத்தார். சிங்கக்கெபியில் இருந்து எடுக்கப்பட்டபோது தானியேலுக்கு எவ்வளவு உயர்வு கிடைத்து இருந்திருக்கும். ராஜாவினுடைய கண்களிலே தயவும் பாசமும் கிடைத்தது.
நான்காவதாக சோதனையின் முலம் நம்முடைய விசுவாசம் பலப்படுகிறது. வேதம் சொல்லுகிறது "அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்." (1 பேதுரு 1:7) . தேவ பிள்ளையே அழிந்து போகிற பொன்னுக்கு அத்தனை சோதனைகள் இருக்கும் என்றால் அழியாத விசுவாசம் நிலையாய் நிற்பதற்கு சோதனை அவசியம் அல்லவா? சோதனையினால் உன் உள்ளம் உறுதிப்படும். விசுவாசம் பலப்படும்.அதிக வல்லமையோடு நீ முன்னேறிச்செல்வாய். சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்!
"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் 10:13)

Post a Comment