மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜாக்சனை ஒரு அபூர்வ மனிதன் என்று சொல்லலாம். சிறு வயதுகளிலேயே தன்னுடைய அபாரமான நடனத் திறமையினாலும், அற்புதமான குரல் வளத்தினாலும் உலகத்தின் கவனத்தை தன் பக்கமாய் தக்க வைத்துக் கொண்டவன். அவனுடைய வாழ்க்கையில், அவன் வாழ்ந்த நாட்களில் அவனுக்கு இணையாக ஒருவரும் வரவில்லை என்பது உண்மை. பல கோடி மக்களை கவர்ந்து கொண்ட ஒரு கலைஞன்.

ஆனால் அவனுடைய வாழ்க்கையோ ஒரு போராட்டம் நிறைந்ததும், தோல்விகளை தழுவியதுமாய் இருந்தது. நடனங்களிலும், பாடல்களிலும் அவன் உலகத்தின் உயர்ந்த சிகரத்தின் ஏறி நின்றான் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையிலோ அவன் அகல பாதாளத்திலே விழுந்து கிடந்தான். காரணம் என்ன? அவன் நற்பண்புகள் சார்ந்த ஒரு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆற்றல்களோடும், திறமைகளோடும் நற்பண்பு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை இணையாததினால் உண்மையான வெற்றியை அவன் காணவில்லை. தன்னுடைய இச்சைகளின் இழுவைக்கு இசைந்துபோன ஒரு வாழ்க்கையினால் அவனுடைய வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. அது அவனுடைய மரணத்தையும் விரைவுபடுத்தியது.

ஆம். கல்வி, திறமை, அறிவுத்திறன், ஆற்றல் யாவும் அவசியமே. ஆனால் அவைகள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை வெற்றியாக்கிவிடாது. கர்த்தரால் ஒரு மனிதனுடைய இருதயம் பண்படுத்தப்பட வேண்டும். அவனுக்குள் தேவ ஆவியால் நற்பண்புகள் உருவாக்கப்பட வேண்டும். அவன் தேவனால் நல்ல ஒழுங்குகளின் பாதையில் நடத்தப்பட வேண்டும். அவனுடைய இருதயம் உயர்ந்த சிந்தை சார்ந்து செயல்படும்படி, அவன் கர்த்தரால் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது வாழ்க்கை உண்மையான வெற்றியின் சிகரத்தை கண்டு மகிழும்.      
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved