இஸ்ரவேலில் அமைந்துள்ள ஒலிவமலையானது வடக்கு தெற்காக மலைகளிடையே பரந்துள்ள வரம்பு போன்ற ஒடுங்கிய மலைப்பகுதியாகும். இது எருசலேமின் பழைய நகரத்துக்கு சற்று வடகிழக்காக அமைந்துள்ளது. இந்த வரம்பு பகுதியானது மூன்று உச்சிகளை கொண்டுள்ளது.
வடக்கே உள்ள மலையுச்சியே மிக உயரமானதும் கடல் மட்டத்திலிருந்து 2676 அடி உயரத்திலுள்ளது. நடு உச்சியானது வேதாகமத்தில் ஏரோதினுடைய ஆலயம் கட்டப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேர்கிழக்காக அமைந்துள்ளது. கீதரோன் ஆறானது மூன்றாவது மலைச்சிகரத்தினை நகரத்திலிருந்து பிரிக்கிறது. இந்த பிரதேசமானது பெயருக்கேற்ப வேதாகம காலப்பகுதியில் ஒலிவ மரங்களால் சூழப்பட்டு காணப்பட்டது. கிறிஸ்தவ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடமானது தீர்க்கதரிசனமாகவும் புதிய ஏற்பாட்டில் பேசப்பட்டதும் எண்ணற்ற முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் நடந்தேறிய இடமாகும். சில உதாரணங்கள்...
பெத்தானியவிலிருந்து எருசலேமிற்கு செல்லும் பாதை ஒலிவமலையை கடந்து தான் செல்கிறது. ஆகவே இயேசு தமது ஊழியத்தில் இந்த ஒலிவமலையை அநேகதரம் கடந்து செல்ல நேரிட்டிருக்கும். அவர் கெத்சமனே தோட்டத்தில் செய்த ஜெபம் திரித்துவத்தின் பூரண வெளிப்பாடு என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இந்த ஒலிவமலையானது தற்போது கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தலமாக மாறியுள்ளது. அநேக தேவாலயங்கள் இவ்விடத்தில் கட்டப்பட்டு வருகிறது. கெத்சமனே தோட்டத்திலுள்ள Church of all Nationns, The Dominius Flevit (இயேசு கதறி அழுதமை) கண்ணீர் துளி வடிவிலான தேவாலயம் இயேசு கண்ணீர் விட்ட இடத்திலுள்ளது.

- வெற்றிப்பவனி சென்றமையும் இயேசு கண்ணீர் விட்ட இடமும்
- நடு மலைச்சிகர அடிவாரத்தில் அமைந்துள்ள கெத்சமனே தோட்டம். ( இது சிலுவையில் அறையப்பட முதல்நாள் இரவு ஜெபிக்க இடமும், யூதாசினால் காட்டிக் கொடுக்கப்பட்ட இடமுமாய் இருக்கிறது.)
- இயேசு இந்நடு மலைச்சிகரத்திலிருந்து பரத்திற்கு ஏறிப்போனார்.
- இயேசுவும் அவரது சீஷர்களும் அநேக தரம் இவ்வழியே பிரயாணப்பட்டு சென்றுள்ளனர். (மலைப்பிரசங்கம்)
ஒலிவமலை பற்றிய வேதாகம சரித்திரம்
பெத்தானியவிலிருந்து எருசலேமிற்கு செல்லும் பாதை ஒலிவமலையை கடந்து தான் செல்கிறது. ஆகவே இயேசு தமது ஊழியத்தில் இந்த ஒலிவமலையை அநேகதரம் கடந்து செல்ல நேரிட்டிருக்கும். அவர் கெத்சமனே தோட்டத்தில் செய்த ஜெபம் திரித்துவத்தின் பூரண வெளிப்பாடு என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இந்த ஒலிவமலையானது தற்போது கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தலமாக மாறியுள்ளது. அநேக தேவாலயங்கள் இவ்விடத்தில் கட்டப்பட்டு வருகிறது. கெத்சமனே தோட்டத்திலுள்ள Church of all Nationns, The Dominius Flevit (இயேசு கதறி அழுதமை) கண்ணீர் துளி வடிவிலான தேவாலயம் இயேசு கண்ணீர் விட்ட இடத்திலுள்ளது.
இதைத்தவிர ஒலிவமலையின் தெற்கு முடிவிடத்தில் கீதரோன் ஆற்றிற்கு குறுக்கே பல கல்லறைகள் உள்ளன. காரணம் அநேகர் இது கடைசி நியாயத்தீர்ப்பின் இடம் என நம்புவதேயாகும். இவைகள் இன்று மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களாக காணப்படுகின்றன.
வேதாகம அடிப்படையல்லாத ஒலிவ மலை பற்றிய வரலாறு
இதனுடைய உயரத்தின் காரணமாக ஒலிவமலையானது படையினரின் அவதானிப்பு நிலையமாக தொன்றுதொட்டு விளங்குகின்றது. எருசலேம் 70ce இல் கைப்பற்றப்பட்டு தேவாலயம் நிர்மூலமாக்கப்பட்ட போது ரோம இராணுவ தளபதியான தீத்து ஸ்கோபஸ் என்ற மலையில் முகமிட்டிருந்தான் (lookout hill). இது ஒலிவமலையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் அதே மலைத்தொடரின் ஒரு பகுதியாக ஸ்கோபஸ் காணப்படுகின்றது. இப்பகுதியானது இராணுவத்தினர் தங்களது பாரிய ஆயுதங்களை பயன்படுத்தி எருசலேம் நகரத்தை கைப்பற்ற பெருந்துணை புரிந்துள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர்..