தேவனோடு நீங்கள் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பே அவர் உங்களுடைய வாழ்க்கையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். காலங்களின் துவக்கத்திற்கு முன்பே தேவன் உங்களை அறிந்திருந்தார், அவர் உங்களுடைய வாழ்க்கையில் எதைச் செய்ய விரும்பினார் என்பதையும் அறிந்திருந்தார் (எரேமியா 1:5 ,சங்கீதம் 139 :13).
தமஸ்கு சாலையில் அப்போஸ்தலனாகிய பவுல் பெற்ற பெற்ற மனந்திரும்புதலின் அனுபவத்திற்கு முன்பாகவே இயேசு பவுலை அறிந்திருந்தார். அவருக்காக ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை அவர் வைத்திருந்தார். ஆனால் பவுலின் மனமாற்றத்தின் அனுபவத்திற்குப் பின்பு தான் இந்த ஊழியத்தின் பணியை கிறிஸ்து வெளிப்படுத்தினார் (அப்போஸ்தலர் 9 :15). தேவனுக்கு உண்மையான ஊழியம் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய தீவிரமான பணியை பவுல் தவறாகப் புரிந்து கொண்டதினால் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக அவர் ஏற்கனவே போர் தொடுத்திருந்தார்! பவுல் தனக்காக எதைச் செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே தேவன் அறிந்திருந்தாலும், அவர் தன்னுடைய பிரசன்னத்தை உணர்ந்து தேவனை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளுகிற வரையிலும் அவருக்கு தன்னை வெளிப்படுத்துகிற காலத்திற்காக காத்திருந்தார்.
நாம், தேவனுக்காக எதைச் சாதிக்கப் போகிறோம் என்பதை புரிந்து கொள்வதற்காக தேவன் நம்மோடு இடைப்படுவதில்லை. அவருடைய செயலை நமக்கு வெளிப்படுத்துவதற்கும், அவருடைய பணியில் நம்மை ஈடுபடுத்த நம்மை அழைப்பதற்குமே அவர் நம்மோடு இடைப்படுகிறார். வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய பணியில் நம்மை இணைத்துக் கொள்வதற்கு நம்மோடு தேவன் இடைப்படுதல் அவசியமாகிறது. ஒவ்வொரு நாளும் அவருடைய உற்சாகமளிக்கும் ஆன்மீகச் சிந்தனையை நமக்கு அளிக்க தேவன் நம்மோடு ஒருபோதும் இடைப்படுவதில்லை. நம்முடைய சத்திய வேதத்தின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே அவர் நம்மோடு பேசுவதில்லை. நமக்கு வெளிப்படுத்த இதற்கு மேலான சிறப்பான காரியங்கள் தேவனிடமுண்டு! தேவன் எதைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதை தேவன் நம்மோடு வெளிப்படுத்தும் போது, அவர் செய்கிற பணியில் நாமும் சேர்ந்து பணியாற்ற அவர் நம்மை அழைக்கிறார்.
தேவனை இன்றே சந்திக்க நீங்கள் ஆயத்தமா? " ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்!" என்று பவுல் கேட்டது போல நீங்களும் தேவனை நோக்கிக் கேட்காத வரையில் தேவனிடமிருந்து எந்தப் பதிலையும் பெற முயலாதீர்கள்.

"இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்." (அப்போஸ்தலர் 26:16)