கிறிஸ்து மீண்டும் எப்போது வருவார்? பல சந்ததிகளாக இந்தக் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அவர் வருகிறார் என்ற நிச்சயம், கிறிஸ்தவன் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும், பின்னணியை அளிக்கிறது. அவர் எப்போது வருவார் என்ற திட்டமான நேரத்தை, கிறிஸ்து வெளியிடவில்லை. ஆனால் அவர் வருகைக்கான அடையாளங்களை நாம் எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறியிருக்கிறார். அவர் வரப்போகிற நேரம் தெளிவற்றதாக இருக்கிறது; அவர் வருகிறார் என்ற உண்மை நிச்சயமாய் இருக்கிறது.
சில நிகழ்ச்சிகள் அவர் வருகிறார் என்ற துரிதத்தன்மையை, அடையாளப்படுத்தும் என்று இயேசு கூறினார். அங்கே யுத்தங்கள் நடக்கும், யுத்தங்களை குறித்த வதந்திகளும் வரும்; அங்கே பஞ்சமும் பூமியதிர்ச்சிகளும் வரும்; கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவர்கள் சித்திரவதையை அனுபவிப்பார்கள். கள்ளப் போதகர்கள் வந்து கிறிஸ்துவுக்கு மாறான போதனைகளைப் போதித்து பலரை அழிவுக்கு வழிநடத்துவார்கள்; மக்கள் தங்களுடைய கண்களுக்கு எவை சரியாக தோன்றுகிறதோ, அவற்றைச் செய்வதன் மூலம், சட்டங்கள் மீறப்படும். அதிகாரத்திலிருப்பவர்கள் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாதவர்களாவார்கள். அக்கிரமம் மிகுதியாவதனால் மக்கள் பயத்திற்குள்ளாவார்கள், அநேகருடைய அன்பு தணிந்து போகும் (மத்தேயு 24 :6 -12).
"இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்." (மத்தேயு 24:8)