கஞ்சர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தில் இடமில்லை. நம்மிடம் உள்ளதை நாம் பிறருக்கு கொடுக்க தயங்கும் போது, நாம் யாரிடம் இருந்து பெற்றோம் என்பதை மறந்து போகிறோம். நாம் பெற்றுக் கொண்ட அனைத்து ஈவும் தேவனிடமிருந்தே நமக்கு வருகிறது(யாக்கோபு 1 :17 ).
நாம் பெற்றுக்கொண்ட அனைத்து செல்வங்களும் தேவனுடைய கிருபையினால் பெற்றவைகளே (1 கொரிந்தியர் 4 :7 ). யோபு தம்முடைய இவ்வாறு தெள்ளத் தெளிவாக கூறினான் : "நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்;
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்" (யோபு 1 :21).
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்" (யோபு 1 :21).
நம்முடைய சொந்த செல்வங்களைக் குறித்த உரிமையை நாம் எளிதாக நிலை நிறுத்திக் கொள்கிறோம். ஏனெனில் அவைகள் நம்மால் சம்பாதிக்கப்பட்டவை, ஆகவே அதின்மேல் நமக்கு உரிமை இருக்கிறது. நாம் இலவசமாகவும், சந்தோஷமாகவும் பெற்ற செல்வங்களை அதே முறையில் கொடுக்க தயாராக இருக்கவேண்டுமென்று இயேசு நமக்கு நினைவுபடுத்துகிறார். நம்மிடமுள்ளதை நம்மைச் சுற்றி வாழும் மக்களிடம் நாம் கொடுப்போம் என்பதை அறிந்து தேவன் தன்னுடைய ஆசீர்வாதங்களை நம் மீது பொழிந்தருள, நாம் ஒரு வாய்க்காலாய் அமைய வேண்டும். நம்முடைய உபகாரங்களை பொறுத்தமட்டில் நாம் சிறந்த உக்கிராணக்காரர்களாய் இருக்க முயற்சிக்கிறோம் என்று சில நேரங்களில் நாம் கூறிக்கொள்கிறோம்; ஆனால் உண்மையில் நாம் சுயநலவாதிகளாய் இருக்கிறோம்.
பிறருக்கு இலவசமாய்க் கொடுப்பதில் நீங்கள் சங்கடப்படுவீர்களானால் நீங்கள் கொடுக்கப்போகிற பொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களேயொழிய, கொடுக்கப்போகிறவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது பொருளாகும். இயேசுவை நாடிவந்த செல்வந்தனான ஒரு தலைவன் தன்னுடைய உலக ஐசுவரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த நிகழ்ச்சியை (லூக்கா 18:18-24) நாம் சத்திய வேதத்தில் வாசிக்கிறோம். உங்கள் தேவன் உங்களுக்குக் கொடுத்த அனைத்தையும் குறித்து தியானம் செய்யுங்கள் (யோவான் 3:16). நீங்கள் கொடுக்கிற கொடையின் மூலம் உங்களுடைய நன்றியறிதலை அவருக்கு எடுத்துக் காட்டுங்கள்.
"இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்தேயு 10:8)