விசிறியாக அல்ல.....

இக்கால வாலிபர்கள் பலர் யாராவது ஒரு சினிமா நடிகனுக்கோ, விளையாட்டு வீரனுக்கோ, அரசியல் தலைவருக்கோ விசிறியாக இருப்பதை பெருமையாக எண்ணுகின்றனர். தான் விரும்பிய நடிகனின் நடிப்பை பார்த்து விசில் அடிப்பதும், தன்னுடைய விளையாட்டுக்காரர் ஜெயிக்கும் போது தான் ஜெயித்துவிட்டது போல கூச்சலிடுவதும், அரசியல் தலைவனின் போலியான பரவச வார்த்தையை கேட்டு கோஷம் போடுவதும் இக்கால வாலிபர்களுக்குப் பெரிய விஷயமாக உள்ளது. ஆனால் ஏராளமான வாலிபர்கள் மேடையில் தோன்றுகின்றவர்களுக்காக விசில் அடித்துக் கொண்டு பார்வையாளர் வரிசையிலே என்றும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்..

நாம் ரசிகர்களாக அல்ல, செயல்படுகின்றவர்களாக மாறவேண்டும். பாராட்டுவது நல்ல பழக்கம். ஆனால் நாம் பாராட்டப்பட என்ன செய்கின்றோம் என்பது முக்கியம்.. ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிறவைகளிலும் அதிகமானவைகளைச் செய்வான் என்றார். அவர் ரசிகர்களை அல்ல, தம்மைப் போல செயல்படுகிறவர்களையே அழைத்தார். அவர் தம்மைப் பாராட்டுகிறவர்களை அழைக்கவில்லை. தம்மைப் போல மற்றவர்களுக்கு நலமாகவும் மாதிரியாகவும் செயல்படும் மக்களையே அழைத்தார்.


வாலிப வாழ்க்கை விசிறியாக வாழ்வதற்கு அல்ல. செயல்படுகின்றவர்காளாக வாழ்வதற்காகவே. விசிலடித்து, கூச்சலிட்டு, கோஷமிட்டு வாழ்வது சற்று நேர மகிழ்ச்சியை தரலாம். ஆனால் அதனால் நமக்கு எந்த அர்த்த பூர்வமான பலனும் இல்லை. ஒரு தாவீதைப் போல, யோசேப்பைப் போல, ஜோசுவாவைப் போல கர்த்தரோடு நல்ல உறவு வைத்து கர்த்தருக்காக வாழ்ந்தால் அதனால் அநேகர் வாழ்வடைவார்கள் என்பது நிச்சயம்... 

"என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான்." (யோவான் 14:12)
     
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved