காட்டிலிருந்து ஒரு குரங்கை பட்டணத்திற்கு கொண்டு வந்து ஒரு மனிதனைப் போலச் செயல்படும்படி பழக்குவிக்கலாம். அவ்விதம் பழக்குவிக்கும் போது அது மனிதன் செய்கின்றது போன்ற பல செயல்களைச் செய்ய முடியும். அது அவ்விதம் செயல்படும் போது " ஆஹா... மனுஷனைப் போலவே இதுவும் பல காரியங்களைச் செய்கின்றதே" என்று பலர் ஆச்சரியப்படலாம். ஆயினும் இது சில மாற்றங்களை கண்ட குரங்குதானேயன்றி, மனிதனாக மாறிவிட்ட குரங்கு அல்ல. இன்னும் இது குரங்காகவே நீடிக்கிறது.
அது போல சில நல்ல ஒழுங்குகள் உள்ள சூழ்நிலைகளினாலும், சில நல்ல உபதேசங்களினாலும், சில சிறந்த அறிவுரைகளினாலும், உயர்ந்த நெறிகளை உடைய போதனைகளினாலும் ஒரு மனிதன் சில மாற்றங்களை காண முடியும். அவனிடம் பக்தியான சில செயல்கள் உருவாக முடியும். பலரை விட அவன் சற்று நன்றாக செயல்பட முடியும். ஆயினும் அவனுடைய அடிப்படை குணங்களும், தன்மைகளும், மன நிலைகளும் மாறிவிடாது. எனவே தான் சிலரிடம் ஆராதனை, ஜெபம், வேதாகம அறிவு, பக்திச் செயல்கள் எனப் பல ஈடுபாடுகள் இருந்தும் அவர்களிடம் உண்மையான அன்பு, தாழ்மை, பொறுமை, சாந்தம், இதயத் தூய்மை, உண்மை, இறக்கம் போன்ற நற்பண்புகள் தொடர்ந்து காணப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் சில ஆன்மீகச் செயல்கள் செய்யப் பழகிக் கொண்டது அதே பழைய பாவிகளாகத் தான்.
ஆனால் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து ஒரு மனிதனின் அடிப்படையையே மாற்றுகின்றார். பாவம் செய்யும் இயல்புடைய பாவியை அவர் தம்முடைய வல்லமையினால் பரிசுத்தமும், உண்மையும், அன்பும், தாழ்மையும், நற்பண்புகளும் நிறைந்த பரிசுத்தவானாக மாற்றுகின்றார். அது தான் இயேசுவினால் வருகின்ற இரட்சிப்பின் அனுபவம். பழைய பாவ சுபாவங்கள் அழிந்து புதிய பரிசுத்த சுபாவங்கள் செயல்படுகின்றன. இந்த இரட்சிப்பினை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா??
"பழையைவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின." 2 கோரி 5 :17