தேவனுடைய சத்தியம் ஒருபோதும் உங்களை கட்டுப்படுத்தவில்லை. அது எப்போதும் உங்களை விடுதலையாக்குகிறது; நீங்கள் சோர்வு அடைந்திருக்கிறீர்களா? உங்களுடைய வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டுப்பட்ட உணர்வு தோன்றுகிறதா? ஒரு குறிப்பிட்ட பாவத்தின் மீது வெற்றி கிடைக்கவில்லையா? கெடுதி விளைவிக்கக்கூடிய ஒரு அடிமைத்தனத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை விடுதலையாக்ககூடிய தேவனை குறித்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடும்.
உங்கள் முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ள வல்லமையற்றவர்களாக இருப்பதாக நீங்கள் உணர்வீர்களானால் பிலிப்பியர் 4 :13 இல் குறிப்பிடப்பட்டிருக்கிற " என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு " என்ற வாக்குத்தத்தத்தில் இருந்து ஊக்கத்தை பெறுங்கள். சூழ்நிலைகளினால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பீர்களானால் உங்களுடைய கடினமான சூழ்நிலைகளில் தேவன் நம்முடைய நன்மைக்காக கிரியை செய்வார் என்று ரோமர் 8 :28 இல் குறிப்பிடுகிற உண்மையை பற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு நீங்கள் அடிமைப்பட்டிருப்பீர்களானால் 1 யோவான் 1 :9 இல் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையை உங்கள் வாழ்க்கையில் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை நீங்கள் அறிக்கையிட்டால் எல்லா அநியாயத்தையும் நீக்கி உங்களைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார் என்ற வாக்குத்தத்தத்தை இந்த வசனத்தில் நாம் காணலாம். இந்த எல்லா உண்மைகளும் உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் நிறைவுக்காக காத்திருக்கின்றன.
சத்தியத்தைப் பற்றி அறிந்து கொள்வது ஒரு காரியமாகும். தேவனுடைய சத்தியம் உங்களுடைய வாழ்க்கையில் கிரியை செய்கிறதை அனுபவிப்பது மற்றொரு காரியமாகும். தேவனுடைய உண்மையை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதை நம்பாவிட்டால் அது உங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பிறருடைய வாழ்க்கையில் தேவன் மகத்தான கிரியை செய்வதைக் குறித்த விபரங்களை நீங்கள் ஏற்கனவே வாசித்தும், கேட்டும் இருக்கலாம். ஆனால் இந்த உண்மைகளை உங்கள் வாழ்க்கையில் தேவன் செயலாற்ற அவரை அனுமதித்திருக்கிறீர்களா? தேவனைப் பற்றிய எந்த உண்மை உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த உண்மை உங்களுடைய வாழ்க்கையில் இன்றே கிரியை செய்ய அவரிடம் மன்றாடுங்கள்.

(அனுதினமும் தேவனை அனுபவித்தல்)"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" யோவான் 8:32