மூன்று சோதனைகள்......

நாம் சோதிக்கப்படுகிறது போல, ஒவ்வொரு வழியிலும் இயேசு சோதிக்கப்பட்டார். எனினும் அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை (எபிரெயர் 4 :15). இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தோடு உலக ஊழியத்தை ஆரம்பித்தார். யோவான்ஸ்நானகன் அவரைத் தண்ணீரில் இருந்து தூக்கிய போது, "இவரில் பிரியமாய் இருக்கிறேன்" என்ற வார்த்தையின் மூலம் இயேசு பிதாவின் உறுதிப்பாட்டை கேட்டார்.

இதற்குப் பிறகு இயேசு வனாந்தரத்திலே நாற்பது நாட்கள் உபவாசத்தில் செலவழித்தார். அங்கே அவரை சாத்தான் சந்தித்து 3 சோதனைகளை கொடுத்தான்.

முதலாவது, இயேசு தன்னுடைய தெய்வீக வல்லமையை பயன்படுத்திக் கற்களை அப்பமாக மாற்றும்படி அவரைத் தூண்டினான். இதைச் செய்வது நியாயமான காரியமாகக் கூடத் தோன்றியது. இயேசு பசியாய் இருந்தார். ஆனால் அவருடைய பிதாவின் வழிநடத்துதலைப் பின்பற்றிச் செல்லுகிற மிகப்பெரிய தேவை அவருக்கு இருந்தது. அவர் உபவாசிக்கும்படி பிதா அவரை வழிநடத்தினார்; ஆனால் சாத்தான் உண்ணும்படி வற்புறுத்தினான்.

அடுத்ததாக, சாத்தானுடைய வழிகளைப் பின்பற்றி பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி சாத்தான் இயேசுவை வற்புறுத்தினான். "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்" (மத்தேயு 4 :16 ) என்று கூறினான். இது உத்தேசமான யூகமாக இருக்குமேயொழிய விசுவாசம் அல்ல என்பதை இயேசு புரிந்து கொண்டார். இது தேவனுடைய பணியை உலக வழியில் நிறைவேற்ற முயற்சிப்பதாகும். உலகம், பிரமாண்டமான வழிகளை நோக்குகிறது; தேவன் பரிசுத்த வாழ்க்கையை உபயோகப்படுத்துகிறார். சாத்தான் கொடுத்த இறுதியான சோதனை தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற இயேசு சாத்தானை பணிந்து கொள்ள வேண்டியதாய் இருந்தது (மத்தேயு 4 :8 -9). இதற்கு கைமாறாக உலகத்தின் சகல இராஜ்ஜியங்களையும் இயேசுவுக்கு கொடுக்க அவன் முன்வந்தான். சாத்தனோடு இணைவதன் மூலம் இயேசு வல்லமையான ஒருவனை தன்னோடு இணைத்துக் கொண்டு சிலுவையில் துன்பத்தை அனுபவிக்காதபடி தன்னுடைய பணியை நிறைவேற்றியிருக்க முடியும். தேவன் மட்டுமே வணங்கப்படத்தக்கவர் என்பதையும் சாத்தானை வழிபடுவது அவன் வாக்களித்த படி திடீர் வெற்றியை கொண்டுவராது, அழிவுக்குரிய தோல்வியை கொண்டுவரும் என்று இயேசு அறிந்திருந்தார்.


நீங்கள் தேவனை பின்பற்ற நாடும்போது, நிச்சயமாக சோதனைகள் வரும். சில நேரங்களில் ஒரு ஆன்மீக வெற்றியை தொடர்ந்து அவைகள் வரும். தன்னை அழிக்ககூடியதும், தேவனுடைய திட்டத்தை சீர்குலைக்கக் கூடியதுமான சோதனைகளில் வெற்றி பெற இயேசு தேவனுடைய வார்த்தையை சார்ந்திருந்தார். ஒவ்வொரு சோதனையையும் சந்திப்பதற்கு ஒரு வழியை முன்மாதிரியாக வைத்திருக்கிறார். 

    "அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.(மத்தேயு 4:3)
    (அனுதினமும் தேவனை அனுபவித்தல்) 
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved