வெறுமனே தேவனுடைய செயல்களை அறிந்து கொள்வதில் மட்டும் திருப்தியடைகிறீர்களா? அல்லது அவருடைய வழிகளை அறிவதில் திருப்தி அடைகிறீர்களா? இங்கே ஒரு வேறுபாடு இருக்கிறது. இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையில் இந்த வேறுபாடு மோசேயோடு ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. தேவன் செய்த அற்புதங்களை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள்; மோசேயை பின்பற்றி பிளந்த சிவந்த சமுத்திரத்தின் வழியாக நடந்தார்கள்.
மோசே செய்தது போல பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட மன்னாவையும் புசித்தார்கள். தேவனை ஒருபோதும் அறிந்திராமல், தேவன் அளித்த உபகாரங்களை பெற்றுக்கொள்வதில் அவர்கள் திருப்தியடைந்தார்கள். எனினும், மோசே தேவன் கொடுத்த உபகாரங்களுக்கு மேலாக சர்வ வல்ல தேவனையே பார்த்தான். எகிப்திய மந்திரவாதிகளை சேர்த்து, பிறரும் அற்புதச் செயல்களை செய்தார்கள். எனினும், தேவன் செய்தது போல யாரும் செய்யவில்லை (யாத்திராகமம் 7:11-12). தேவன் செயலாற்றிய வழி அவருடைய தன்மையை பார்ப்பதற்கு ஒரு வழிகோலாக இருந்தது. தேவனுடைய வல்லமையில் மட்டும் மோசே திருப்தியடைந்தவனாக இருந்திருந்தால் ஒரு தேவ தூதனின் பிரசன்னத்தை அவன் ஏற்றுக்கொண்டு, அவனுடைய செயல்களில் வெற்றியடைந்திருக்கக்கூடும் (யாத்திராகமம் 33 :15 ). ஆனால் மோசே இன்னும் மேலான அனுபவத்தை விரும்பினான். அவன் தேவனுடைய செயலை மட்டுமல்ல, தேவனையே அனுபவிக்க விரும்பினான்.
இந்த நாட்களிலும் கூட இஸ்ரவேலர்களைப் போல சிலர் தேவனை அறிந்து கொள்வதற்குப் பதிலாக தேவனுடைய அனுபவிப்பதில் திருப்தியடைகிறார்கள். ஜெபத்திற்கு கிடைக்கும் பதிலை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். எனினும், பதில் அளிக்கிறவரை ஒருபோதும் அறிந்து கொள்வதில்லை. அவர்களுடைய குடும்பங்கள், வீடுகள் மற்றும் வேலைகள் ஆகியவற்றில் தேவன் கொடுக்கிற உபகாரத்தின் கரிசனையினால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எனினும், ஆசீர்வாதங்கள் எவரிடமிருந்து வருகிறதோ அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தேவன் கொடுக்கிற பாதுகாப்பினால் பெலன் அடைகிறார்கள். எனினும், அந்த பாதுகாப்பாளரோடு உறவு ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் முயலுவதில்லை.
தேவனோடு பெற்ற அனுபவத்தின் மூலம் அவரை மிகவும் தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? தேவனுடைய செயலை நீங்கள் பார்க்கும் போது அவற்றிக்கும் மேலாக அவருடைய தன்மையின் வெளிப்பாட்டை உற்று நோக்குங்கள் (ஆதியாகமம் 22 :14 , யோவான் 6:35 ).
- 'அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.' (சங்கீதம் 103:7)
(அனுதினமும் தேவனை அனுபவித்தல்)