நீதிமொழியில் இருந்து சிந்தனைக்காக....

இதில் நீங்கள் யார் ?  
  • ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருகிறான், ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தை கொடுக்கிறான்.
  •  சோம்பற்தனமுள்ள கைகள் மனிதனை ஏழையாக்கும், ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தை கொண்டு வரும். 
  • நற்கட்டுப்பாட்டை பேணுகிறவன் வாழ்வின் வழியை காட்டுகிறான், ஆனால் கண்டித்து திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ மற்றவர்களையும் வழி தவறப்பண்ணுகிறான்.
  • கதை காவித் திரிகிறவன் நம்பிக்கைத் துரோகம் செய்கிறான், ஆனால் நம்பகமானவன் இரகசியத்தை காத்துக்கொள்வான். 
  • உணவு இல்லாமல் இருந்தும் தன்னை பெருங்குடிமகனாக பாசாங்கு பண்ணுவதை விட தன்னுடைய வேலையைத் தானே செய்கிற சாதாரண மனுஷன் மேன்மையுள்ளவன். 


எதற்கு கோபம் ? 

  • சாந்தமான பதில் உக்கிர கோபத்தை தணிக்கும், ஆனால் கடுஞ்சொல் கோபத்தை தூண்டுகிறது. 
  • ஒரு போர்வீரனை விட பொறுமையுள்ளவன் சிறந்தவன், ஒரு பட்டணத்தை கைப்பற்றுகிறவனை விட தன் கோபத்தை அடக்குகிறவன் சிறந்தவன். 
  • வாக்குவாதத்தை விரும்புகிறவன் தொல்லையை விரும்புகிறான். 
  • சண்டையை தவிர்த்து கொள்வது மனிதனுக்கு மேன்மையாகும், ஆனால் ஒவ்வொரு மூடனும் வாக்குவாதம் செய்ய விரைகிறான்.


உன்னால் முடியும்..!
  • நன்மை பெற தகுதியானவர்களுக்கு, அதைக்கொடுக்க உன்னால் இயலும்போது அதை அவர்களுக்கு கொடுக்காமல் விடாதே. 
  • கேட்டதை கொடுக்ககூடியதாய் இருக்கும் போது, உன் அயலாவனிடம் " போய் பிறகு வா ; அதை நாளைக்கு உனக்கு தருவேன் " எனச்சொல்லதே. 
  • உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாய் சூழ்ச்சி செய்யாதே. 
  • ஒருவன் உனக்கு ஒரு தீங்கும் செய்யாத போது காரணம் இல்லாமல் அவன் மேல் குற்றம் சாட்டாதே.
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved