
இந்த உரிமையைப் பற்றிக்கொண்டு அதில் நிலைத்திருக்க இயேசு தெரிந்து கொள்ளவில்லை. அவருடைய பிதா அவரைக் கேட்டுக்கொள்ளும்போது அவர் விட்டுக் கொடுக்கமுடியாத எந்த ஒரு நிலையும், பரலோகத்திலுள்ள அவருடைய மகிமையான நிலையும் கூட அவருக்கு மிக விலையேறப்பெற்றதாக இருக்க முடியாது. பிதாவுக்கு கீழ்ப்படியும் பொருட்டு, பிதாவில் அவர் வைத்திருந்த அன்பு எந்த தியாக பலியையும் செய்வதற்கு அவரை பலவந்தப் படுத்தியது. மானிடத்தை மீட்பதற்கு ஒரு மாசற்ற பலி பிதாவுக்கு தேவைப்பட்டபோது இயேசு தன்னுடைய உரிமைகளை தழுவிக்கொள்ளவில்லை; புழுதியில் உள்ள போராட்ட சிருஷ்டிகளின் பாவங்களுக்காக அவர் துன்பப்படவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் வாதிடவில்லை (ஏசாயா 53 :7 ). மாறாக , ஒரு மானிடனாக மாறுவதற்கு தன்னுடைய பரலோக மகிமையின் வாழ்வைத் துறந்தார். அவர் ஒரு மாட்டு தொழுவத்தில் பிறந்தார், அவர் ஒரு முன்னணையில் தூங்கினார்; ஒரு கொடுமையான மரணத்தை அவர் சந்திக்கப்போகிற நாளுக்காக தன்னை ஆயத்தப்படும் பொருட்டு அவர் வாழ்க்கை முழுவதும் அன்பாகவே வாழ்ந்தார். அனைத்தையும் விருப்பத்தோடு செய்தார்.
தேவன் நமக்கு கொடுத்திருக்கிற காரியங்களை நாம் இறுகப் பற்றிக்கொள்ளும்படி தூண்டப்படுகிறோம். " நான் உன்னை விட்டுக் கொடுக்க விருப்பமுள்ளவனாயிருக்கிறேன், ஆனால் தேவன் என்னிடம் எதை கேட்பார் என்று நான் எண்ணவில்லை!" என்று நாம் கூறலாம். தன்னுடைய மகனுடைய வாழ்க்கையில் தீவிர மாற்றங்களை செய்யும் படி பிதா கேட்டார். நம்முடைய சிலாக்கியங்களையும், வசதிகளையும் தியாகம் செய்யும்படி அவர் நம்மிடம் கேட்பார் என்று நாம் அவரிடம் எதிர்பார்க்க வேண்டாமா?

"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது"
பிலிப்பியர் 2:5
(அனுதினமும் தேவனை அனுபவித்தல்)