இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையின் வளர்ச்சி (01)

www.ceylonchristian.com
இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையானது பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அதாவது 1814 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி அன்று ஆழமான தைரியமான அர்ப்பணிப்புடனும், இலங்கை மண்ணில் இயேசுவின் அன்பை எடுத்து சொல்லவும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு கடவுளின் கிருபை மிஷனரிகள் மேல் பெரிதாக இருந்த படியால் அவர்களால் இது  இயலுமான காரியமாய் ஆயிற்று.


ஜோன் வெஸ்லியின் வரலாறு 



ஜான் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையின் நிறுவனர் ஆவார். இவர் இங்கிலாந்தில் உள்ள எப்வோர்த் எனும் சிறு கிராமத்தில் ஜூன் 1703 இல் பிறந்தார்.இவர் தனது 23 ஆவது வயதில் மதகுருவாக தன்னை அர்ப்பணித்தார். அதோடு தத்துவத்திலும் மாஸ்டர் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். இவரை பற்றி சொல்லபோனால் இவர் ஒரு பலவீனமான மனிதன்.  



www.ceylonchristian.com

www.ceylonchristian.com

www.ceylonchristian.com

www.ceylonchristian.com

அந்த காலத்தில் இங்கிலாந்து தேசம் பல புரட்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் உள்ளாகி கொண்டு இருந்தது. லண்டன் நகரமானது ஒரு நெரிசலான வறுமை, சூது, மது போன்றவற்றால் நிறைந்த ஒரு இடமாக காணப்பட்டது. இளைஞர்கள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்ட காலமது. மக்கள் தங்களது தார்மீக கொள்கைகளை இழந்தவர்களாய் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தனர். சிறைச்சாலை கைதிகளால் நிறைந்திருந்தது, வைத்தியசாலை நோயாளிகளை குணப்படுத்த முடியாமல் திணறியது. இந்த மன அழுத்தத்துடன் இருந்த சமுகத்திற்கு ஜான் வெஸ்லி இன் நல்ல செய்திகள் ஒரு இரட்சிப்பை கொண்டு வர ஏதுவாக இருந்தது. 
தொடரும்......
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved