Add caption |
இது வேதகாமத்திலிருந்தும் சரித்திர ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்டது...
- திகதியிடப்படாத : அண்டத்தின் உருவாக்கம், படைப்புகள் பற்றிய கணக்கு (ஆதியாகமம்)
- கி.மு 4000-2000 : ஆதியாகமம் 1-12 இல் குறிப்பிடப்படுவது போல மனிதர்களின் உருவாக்கம், வீழ்ச்சி, பெருவெள்ளம், பாவம், முக்கிய நபர்களின் அறிமுகம்.
- கி.மு 3500 : நோவாவின் காலத்தில் உண்டான பெருவெள்ளம். நோவா கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஒரு பெரிய பேழையை உருவாக்கினான். இதனால் அவனது குடும்பம் உட்பட அனைத்து விலங்கிலும் ஒவ்வொரு ஜோடு உலகம் கண்டிராத இப் பெருவெள்ளத்தில் காப்பற்றப்பட்டது.
- கி.மு 2000-1700 : ஆதியாகமம் 12-50 இல் நடைபெற்ற நிகழ்வுகள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்ற சரித்திர நாயகர்களின் வாழ்வின் நிகழ்வுகள்.
- கி.மு 1592 : மோசே இன் பிறப்பு. மோசே பிறப்பதற்கு முன்பே இஸ்ரவேலர்கள் எகிப்திலே அடிமைகளை இருந்தனர். அந்த காலத்தில் பிறக்கும் சகல ஆண் (இஸ்ரவேல்) குழந்தைகளையும் கொல்லுமாறு பார்வோன் கட்டளையிட்டிருந்தான். எனினும் மோசே காப்பாற்றப்படுகிறான், பார்வோனின் வீட்டிலேயே வளருகிறான், இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து மீட்க ஆண்டவர் இவனை பயன்படுத்துகிறார்.
- கி.மு 1500-1050 : யாத்திராகமம், லேவியாராகமம், எண்ணாகமம், உபாகமம், யோசுவா, நியாயாதிபதிகள் மற்றும் ரூத் என்பவற்றின் காலம்.
- கி.மு 1406 : இஸ்ரவேலர் கானான் தேசத்தை அடைந்தனர் (ஜோசுவா தலைமையில்). எனினும் அரசியல் அமைதியின்மை நிலவியது.
- கி.மு 1050-1000 : 1 சாமுவேல், 1 நாளாகமம் மற்றும் சங்கீதம் போன்றவற்றின் நிகழ்வுகள்.
- கி.மு 950-850 : 2 சாமுவேல் , 2 நாளாகமம் , நீதிமொழிகள் 1-24, பிரசங்கி மற்றும் உன்னதப்பாட்டு என்பவற்றின் நிகழ்வுகள்.
- கி.மு 1050-931 : இஸ்ரவேல் தேசத்தில் ஐக்கிய முடியாட்சி நடைபெற்ற காலம்.
- கி.மு 967-960 : முதலாவது தேவாலயம் சாலமோன் அரசனின் கண்காணிப்பில் கட்டப்பட்டது. தேவாலய ஆராதனை என்பன ஆரம்பிக்கப்பட்டன.
- கி.மு 931-722 : இஸ்ரவேல் தேசம் இரண்டாக பிரிந்தது. சாலமோன் அரசனின் மரணத்தின் பின் அவனது மகன் ரெகபெயாம் காலத்தில் வடக்கு, தெற்கு இராச்சியங்களாக பிரிந்தது. வடக்கு இஸ்ரவேல் (10 கோத்திரங்கள்) என்றும் தெற்கு யூதா (2 கோத்திரங்கள்) என்றும் அழைக்கப்பட்டது.
- கி.மு 850 : 2 இராஜாக்கள் பகுதியில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள். (வடக்கு இராச்சியத்தின் வீழ்ச்சியும், தெற்கு இராச்சியத்தின் எழுச்சியும்)
David |
தொடரும்...