இலங்கையும் கிறிஸ்தவமும்....
இலங்கையில் ஆரம்ப காலத்தில் பௌத்த, இந்து மதங்களே பிரதான இடத்தை பிடித்திருந்தன. பின்னர் 15 ஆம் நூற்றாண்டில் வர்த்தக நோக்கமாக வந்த அரேபியர்களால் இலங்கையில் இஸ்லாமிய மதம்( முஸ்லிம் ) தோற்றம் பெற்றது.
அதன் பின்னர் 16 -19 நூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு மத மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக வந்த ஐரோபியர்களினால் இலங்கையில் கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது. ஐரோப்பாவில் ஏற்பட்ட புரட்சிகள் காரணமாகவே அவர்கள் தேசங்களை கடந்து தங்களது செல்வாக்கினை பிற ( ஆசியா , ஆப்ரிக்கா ) நாடுகளில் காட்ட முற்பட்டனர்.

முதலாவது இலங்கையில் கால் பதித்த ஐரோப்பியர்கள் போர்த்துக்கேயர்கள் ஆவார்கள். இவர்களது வருகையால் கத்தோலிக்க மதம் இலங்கையின் கரையோர பகுதிகளில் பரவ ஆரம்பித்தது.
அதற்கு பிறகு வந்த ஒல்லாந்தர் இவர்களோடு சண்டையிட்டு இலங்கையை கைப்பற்றினர் ( கண்டி இராசதானி தவிர்ந்த கரையோர பகுதி ). புரட்டஸ்தாந்து மதத்தை இவர்கள் பரப்பியதோடு கத்தோலிக்கர்களோடும் சண்டையிட்டு கொண்டனர்.
17 - 18 நூற்றாண்டு பகுதியில் வந்த ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடம் இருந்து கரையோரத்தை கைப்பற்றி, இவர்களால் கைப்பற்றப்படாமல் இருந்த கண்டி இராசதானியையும் கைப்பற்றி 1815 ஆம் ஆண்டு முழு இலங்கையையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களால் கிறிஸ்தவ சமயம் இன்னும் பரவ தொடங்கியது. பல மிசனரிகள் இக்காலப்பகுதியில் வந்து பாடசாலைகள், தேவாலயங்கள் போன்றவற்றை ஆரம்பித்து கிறிஸ்தவம் பற்றி அறிவிக்க தொடங்கினர். அக்காலப்பகுதியில் மெதடிஸ்ட் திருச்சபையின் வளர்ச்சியும் அதிகமாக இருந்தது.

.
இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பு, கிறிஸ்தவமும் இலங்கையில் முக்கிய மதங்களில் ஒன்றானது. ஆனால் உலக கிறிஸ்தவ மாற்றத்தால் ஆவிக்குரிய (சுவிசேஷ) கிறிஸ்தவ சபைகள் (Evangelical christianity) உலகமெங்கும் உருவாக தொடங்கின. இலங்கையிலும் அதன் பாதிப்பு 1980 களின் பின்னர் உண்டானது. அதன் பின்பு இந்த ஆவிக்குரிய கிறிஸ்தவ திருச்சபைகளின் வளர்ச்சி இலங்கையில் அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போது இலங்கையில் பல கத்தோலிக்க, ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட், Evangelical கிறிஸ்தவ திருச்சபைகள் காணப்படுகின்றன....