"கல்லெறிந்து விடலாமா.. என்ன சொல்கிறீர் ???"

சுற்றி வர எதிராளியின் நெருக்கம்.. இருதயத்தில் பாவத்தின் அழுத்தம். விபசாரி வீதியால் வலியோடு இழுத்து வர படுகிறாள்...

என் பாவம் திரளானது.. என்னால் விட கூட முடியவில்லை.. ஆனால் விட்டு விட்டால் நலமாயிருக்குமே. ஏன்? நான் இறந்தே போகிறேன்..

மத தலைவர்கள் இழுத்து போகிறார்கள்.. காரணம் அவர்கள் பாவிகள் இல்லை அவர்கள் மனதில்..

இயேசுவிடம் போகிறார்கள்.. "கல்லெறிந்து விடலாமா.. என்ன சொல்கிறீர்??"

உலகம் பாவத்தில் அகப்பட்ட மனிதனை நியாயம் தீர்க்க துணிந்து விட்டது.. அதுவும் மரணம்.. கல்லெறி பட்டு செதில் செதிலாய் செத்து போகும் மரணம்..

இயேசு யாரையுமே பார்க்கவில்லை.. காரணம் அவருக்கு

1. அவளிடம் இருந்த பாவம் தேவை இல்லை
2. அவளை உலக பார்வையில் வெறுத்து தள்ளிய மத தலைவர்களின் பேச்சும் தேவை இல்லை..

அவர் சிந்தித்து ஒன்றே.. "அவள் வாழ்கையில் இருள் நீங்கினால் போதும்.. எனது மகளை நியாயம் தீர்க்க யாருக்கும் இங்கு அனுமதி இல்லை.." உண்டாக்கினவர் நானே.. நானும் அவளை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதில்லை..அவளின் மனமாற்றம் வைத்து அவளை மன்னித்து விடுகிறேன்"

மத தலைவர்களை பார்த்து

''உன்னில் குற்றம் இல்லாதிருக்கிரவன் முதல் கல்லை எறி: மற்றவன் பின்னோக்கி செல்"

நிலம் வெறுமையாகி போனது..

நீ_யாராயிரு_எவனாயிரு_ஆனால்_உன்னை_உண்மையாய்_நேசிக்கும்_இயேசுவை_மிஸ்_பண்ணாதே..

உலகம்_உன்னை_பாவி_என்று_மட்டும்_தான்_நியாயம்_தீர்க்கும்

ஆனால்_இயேசு_ஒருவரே_உன்னை_மன்னித்து_சொந்த_மகனாக_மகளாக_மாற்றி_கொள்ளுவார்.



JRB

Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved