ஏதடா ஜெயம்?

யாருக்கு சவால் யார் விடுவது?
பார் போற்றும் பாமனுக்கு-ஜஸ்ட்
ஒரு பாதாளம் போட்டியா?

பாவமும் பரிசுத்தமும் நம் பட்டயத்திலா?
அதுவும் பந்தயத்திலா?
ஒளியும் இருளும் ஒன்றை ஒன்று முத்தமிடாமல்
கொஞ்சம் எட்டியே நிற்கின்றது.
சித்திரம் என்றால் என்ன
சின்னப் பிள்ளைத்தனமா?
பரமனைப் பற்றிய கரம் பற்றி எரிய வேண்டாமா?

தோல்வி காணா வேந்தன் முகம்பார்த்துப்
போட்டியிட – உனக்கு எப்படி வந்தது இந்தத்துணிச்சல்?
ஆதாமும் ஏவாழும் பழத்தைத் - திருடி
ஊண்டதால் வந்ததோ- உனக்கு
இந்தத் துணிச்சல்
யோர்தான், செங்கடல், ஏன்- எரிகோவும் கூட
காட்டியதே கர்த்தர் கரப்பலத்தை கண்டுமா- உனக்கு 
இந்தத் -துணிச்சல்

கல்லை அப்பமாக்கும் கதை பேசும் போது- நீ
காணவில்லையா?  கர்த்தர் அக்கினி கரத்தை- அவர்
கண் நோக்கி உன் பலம் காட்ட-எப்படி
வரக்கூடும் இந்தத் துணிச்சல்
நானும் என் வீட்டாரும் பாவப் பாதையில்
பயணம் செய்ததால் - உன்
பார்வைக்கு வந்ததோ இந்தத் துணிச்சல்

வாலிபம் எல்லாம் யோசேப்பாய்- மாறினால்
பலம் பெற்று விடும் நம் தேவகரம்
வயோதிபம் எல்லாம் யோபுவாய் - மாறினால்
திடன் பெற்றுவிடும் நம் நேச கரம்
பொல்லாத சாத்தான்  போட்டி
போடத் துணிந்தது பாவத்தை- நான்
பாலாய் பருகுவதால் தானே
பொல்லாங்கன் போதகரைப் போட்டி- போட
அழைத்தது நான் பாவப் பாசியில்- தினமும்
சறுக்கி விழுவதாலல்லோ
விழுவான் எழுவான் அவன்தான் நீதிமான்- கர்த்தர்
அவன் கரம் பிடித்திருக்க திருட்டுச்- சாத்தானே
உனக்கு ஏதடா ஜெயம்

                                                                                                                                                        டக்ளஸ் அமுதா
கிழக்கிழங்கை சுவிஷேசபணி,
திருப்பெருந்துறை,
மட்டக்களப்பு.
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved