தவறு தவறுதான்...

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் ஒருவன் திருமணமான இன்னொரு பெண்ணுடன் அடிக்கடி காணப்படுவான். திருமணமான பெண்ணுடன் இவ்விதம் அடிக்கடி சேர்ந்து காணப்படுவது தவறில்லையா? என்று ஒருவர் அவனிடம் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் தவறு என்பது நீங்கள் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது. நாங்கள் நல்ல நல்ல நண்பர்கள் அவ்வளவு தான், அதனை உங்கள் கண்கள் தவறாக பார்ப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றான்.

இன்று பல தவறான காரியங்கள் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படவேண்டும் என்ற சித்தாந்தம் உள்ளது. ஒரு செயல் சரியா தவறா என்பது பிறர் அதனை பார்க்கும் விதத்தில் தான் உள்ளது என்ற நியாயம் சரியானதல்ல. கறுப்பை வெள்ளை என்றும், சிவப்பை நீலம் என்றும் பார்க்க முடியாது. ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொண்டு இது நல்ல நட்பு மட்டும்தான் என்பது முட்டாள்தனமானது. ஆணும் பெண்ணும் நெருங்கிய நட்புகொண்டால் அது நல்ல நட்பாக தொடர முடியாது. அதோடு இன்றைய காலக்கட்டத்தில் தவறான எண்ணங்களுடன் நட்பு கொள்வது என்பது அதிகரித்த ஒன்றாகவே சமூகத்தில் காணப்படுகிறது.


இன்று நாங்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் நீங்கள் தவறுகளாகப் பார்க்காமல் சரியானவைகளாகப் பாருங்கள் என்று கூறும் நிலை உள்ளது. ஆனால் ஒரு செயல் தவறா சரியா என்பதைப் பகுத்தறியும் பண்பினை தேவன் தந்திருக்கின்றார். 

நம்முடைய தவறைச் சரி என்று பார்க்க மனிதர்களை நாம் கட்டாயப்படுத்தலாம். ஆனால் உள்ளந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கும் தேவனை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. அவர் நாம் விரும்புவது போல பார்க்கமாட்டார். அவர் எது எப்படியோ அதனை அப்படியே பார்ப்பார். அவருடைய கண்களுக்கு நாம் எதையும் மறைக்க முடியாது. எனவே தவறைத் தவறு என்று உணர்ந்துகொள்ளும் நல்ல மனம் நமக்கு வேண்டும். 
"அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்......" எபி 4:13
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved