இப்படியிருக்க, நீங்கள் அதிக
ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே
ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே
பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே
சகோதரசிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். (2
பேதுரு 1:5-7).
ஒரு பெரிய கடை ஒன்று இருந்தது. அதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளுக்கு
தேவையானதெல்லாம் வாங்கி கொள்ளும் வண்ணம், ஒரே கூரையின் கீழ்
கிடைக்கத்தக்கதாக பெரியதாக இருந்தது. அதில் வேலைக்கு சேருவதற்காக ஒரு
வாலிபன் விண்ணப்பித்திருந்தான். அவனை வேலைக்கு சேர்த்த முதலாளி இன்னும்
இரண்டு நாளில் அவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்க்க போவதாக கூறினார்.
அதன்படி, இரண்டு நாள் கழித்து அவனால் ஏதாவது லாபம் வந்ததா என்று பார்க்க
வேண்டி, அவனை அழைத்தார். 'இந்த நாளில் நீ எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்?
எத்தனை வாடிக்கையாளர்களை சந்தித்தாய்?' என்று கேட்டார். அந்த வாலிபன், ஒரே
ஒருவரைதான் என்று கூறினான். அதற்கு முதலாளி, 'என்னது? ஒரே ஒரு
வாடிக்கையாளர்தானா? மற்றவர்கள் எல்லாம் ஒரு நாளில் 30-40 வாடிக்கையாளர்களை
சந்தித்து, நமது கடைக்கு லாபம் கொண்டு வருகிறார்கள், நீ என்னடா என்றால் ஒரே
ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் வியாபாரம் செய்திருக்கிறாய்? எவ்வளவு
சம்பாதித்தாய்?' என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன், '15,00,000
ரூபாய்கள்'; என்றதும், ஆ! அது எப்படி? என்று வியப்புடன் முதலாளி கேட்டார்.
அந்த வாலிபன் விவரிக்க ஆரம்பித்தான், 'இந்த நாள் காலையில் அந்த மனிதருக்கு நான் ஒரு சிறிய மீன் பிடிக்கும் தூண்டிலை விற்றேன். அதன்பிறகு அவர் வந்து இதைவிட பெரிய தூண்டில் வேண்டும் என்றார், அதன்பிறகு அதைவிட பெரிய தூண்டில் என்று மூன்றை அவரிடமே விற்றேன். அதன்பிறகு, மீன் பிடிப்பதற்கு தேவையான எல்லா சாதனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அவரிடம் விற்றேன். அதன்பிறகு அவரிடம், இவை எல்லாவற்றையும் கொண்டு போக ஒரு படகு வேண்டுமே என்று சொல்ல, அவர் அதையும் வாங்கினார். இந்த படகை தன்னுடைய பழைய கார் இழுத்து கொண்டு போக முடியாதென்று சொல்ல, அவருக்கு தற்போதுள்ள புதிய மாடலில் ஒரு காரையும் வாங்க வைத்தேன். இப்படியாக ஒரே வாடிக்கையாளரிடம் இத்தனையும் சம்பாதித்தேன்' என்று கூறினான். அப்போது முதலாளி, 'ஒரு சிறிய மீன் தூண்டிலை வாங்க வந்த நபரிடம் இத்தனை காரியத்தையும் நீ விற்றாயா?' என்று கேட்க, அவன், 'இல்லை, அவர் என்னிடம் தன் மனைவியிடம் சண்டையிட்டு, வேறு அறையில் உறங்குவதற்காக ஒரு கம்பளி வாங்க வந்தார். நான் அவரிடம், உமக்கு இந்த வார கடைசி வீணாக வேண்டாம், போய் மீன் பிடிப்பீர்களானால் உமது பொழுது போகும்' என்று கூறினேன்' என்றான். அந்த முதலாளி அந்த வாலிபனின் வியாபார நுணுக்கத்தை மெச்சி கொண்டார்.
ஒரு பொருள் மற்ற பொருளை பெறுவதற்கு வழிவகுத்ததை போல, நம் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் முன்னேற வேண்டும். சிலர் இரட்சிக்கப்பட்டதோடு தங்களுடைய ஆவிக்குரிய அனுபவத்தில் நின்று விடுகின்றனர். சிலர் அந்நிய பாஷையில் பேசுவதோடு திருப்தி அடைந்து விடுகின்றனர். இல்லை, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அடிப்படையிலேயே நின்று விடுவது இல்லை. அது ஒரு தொடர் ஓட்டமாகும். நாம் கிறிஸ்துவின் பூரண வளர்ச்சி அடையும் வரை தொடர்ந்து முன்னேறி கொண்டே இருக்க வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக நாம் பெற்று கொண்டு போய் கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தான் பேதுரு அப்போஸ்தலன் 'இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்' என்று போதிக்கிறார். விசுவாசத்தோடே நாம் நின்று விடக்கூடாது, அதன்பின், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகிதம், அன்பு இவற்றிலே நாம் வளருகிறவர்களாக காணப்பட வேண்டும். ஒன்றை பெற்று அதன்பின் நின்று விடுகிறவர்களாக அல்ல, இவை அனைத்திலும் நாம் முன்னேறி இயேசுகிறிஸ்துவை போல மாற வேண்டும். அதுவே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். 'இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது' - (2 பேதுரு 1:8). ஆமென் அல்லேலூயா!
உம்மை போலாக்கும் இயேசுவே
உம்மை போலாக்கும்
உள்ளத்தை அன்பால் நிரப்பி – என்னை
உம்மை போலாக்கும்
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவை அறிகிற அறிவிலே நாங்கள் வளர்ச்சியடையத்தக்கதாக நாங்கள் மேற்கண்ட வசனத்தில் காணப்படுகிற ஒவ்வொரு காரியத்திலும் நாங்கள் வளரவும், கனியுள்ள ஜீவியம் செய்கிறவர்களாக, கிறிஸ்துவை போல மாறத்தக்கதாக எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Post a Comment