பெத்லகேம்

அறிமுகம்
எப்பிராத்தா என அழைக்கப்பட்டது.
இஸ்ரவேலிலுள்ள ஒரு நகரம், எருசலேமிலிருந்து 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. பெத்லகேம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கிய இடமாகும்.வேதாகம அறிக்கைகளின் படி இயேசுவின் பிறப்பிடமாகும்.

வேதாகம சரித்திரப் பிண்ணணி
  • பழைய ஏற்பாட்டில் பெத்லகேமானது ஆதிப்பிதாவான யாக்கோபின் மனைவியான ராகேல் அடக்கம்பண்ணப்பட்டதிலிருந்து முக்கியமான இடமாக மாறியது.
  • தாவீதின் சொந்த ஊர் என கிறிஸ்தவர்களால் அறியப்பட்ட நகரம்.
  • சரித்திரத்தின்படி ‘புகலிடம்’எனப்பட்டது. இங்கு யூதர்கள் 6 ம் நூற்றாண்டுகளில் தங்கியிருந்தனர்.
  • வேதாகமத்தின்படி யோசேப்பு மரியாளுடன் குடிமதிப்பெழுதும்படி வந்தார்கள். ஒருவன் குடிமதிப்பெழுதப்படும் போது தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்பது கட்டளையாயிருந்தது.

இயேசு ஒரு தொழுவத்தில் பிறக்கிறதாகவும், யோசேப்பும் மரியாளும் பெத்லகேமை வந்தடையும் போது சத்திரங்கள் யாவும் நிரம்பி வழிந்ததாகவும் கிறிஸ்தவ வரலாறு  கூறுகிறது.

கலாசார பிண்ணணிக்காட்சிகள் பெரும்பாலும் கூடாரம், தானியக்களஞ்சியம் என்பவற்றை சித்தரித்த போதும், அந்த காலத்தில் அதிகமாக மிருக தொழுவங்களாக இருந்தவை குகைகளே.


கி.பி 4 ம் நூற்றாண்டு கொண்ஸ்தன்தைன் என்பவரால் Church of the Nativity   ஆலயம் இயேசு பிறந்ததாக நம்பப்படும் குகையின் மீது ஸ்தாபிக்கப்பட்டது. அவ் ஆலயம் 6 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அழிக்கப்பட்டது. எனினும் Justinian I மீண்டும் ஒரு பெரிய ஆலயத்தை கட்டுவித்தார். இது தற்போதும் இருக்கிறது.
Church of the Nativity


1934 ல் இவ் ஆலயத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முடிவின்படி உண்மையான கொண்ஸ்தன்தேனிய கட்டமைப்பு சிதைவுகள்  அக்கால Church of the Nativity ஆலயத்திற்குரியது என ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved