செய்மதியை விண்வெளி ஏற்றி சாதனை படைத்த இலங்கை, சுட சுட படைத்த அடுத்த
சாதனை தென் ஆசிய பிராந்தியத்திலே பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில்
முதலிடம் பிடித்தது. வழமையாக இது போன்ற பாலியல் சம்பந்த விடயங்களிலே
இந்தியாவையே (ஆசியாவில்) கைகாட்டும் இந்த சர்வே இந்த முறை இலங்கை பக்கம்
திரும்பி இருக்கிறது.
கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளே இலங்கையில் மிக பரபரப்பாக பேச பட்ட
விடயம் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று ஒரு பெண்ணே
சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருந்தார். சமூக செயற்பட்டாளராக
அறியப்படும் ஒரு முஸ்லிம் பெண்ணான "சர்மிளா செய்யத்" இந்த கருத்தை
பகிரங்கமாக வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தமை குறிப்பிடதக்கது.
அவர் கூறியதை அங்கீகாரம் பண்ணுவது போலவே இந்த தகவலும் வந்து இருப்பது கொஞ்சம் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் சிந்திக்க வேண்டியதே..
மேலும் எச்.ஐ.வி தொற்றினால் மட்டும் இந்த வருடம் (2012) 22 பேர்
மரணமடைந்துள்ளதுடன் 1597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு தகவல்
தெரிவிக்கிறது. தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள
புள்ளிவிபரவியல் தரவுகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எச்ஐவி
தொற்றுக்குள்ளானவர்களில் 950 பேர் ஆண்கள், 647 பேர் பெண்களாவர். பாதிக்க
பட்டவர்களின் இந்த எண்ணிக்கை கடந்த வருடத்திலும் பார்க்க 134 பேர் அதிகம்
(1463) என்பதும் குறிப்பிட தக்கது.
வேதம் கூறுகிறது .....
“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங். 127:5)
பாலிய இச்சைக்கு விலகியோடியதால் சிறைத்தண்டனை அனுபவித்த யோசேப்பின்
வாழ்க்கையில் அவனது இளமை பருவம் சிறைச்சாலைக்குள்ளும் தனிமையிலும்
கடந்துபோனது. ஆனால் அவனது பின் நிலைமையை தேவன் ஆசீர்வதித்துக்
கொடுத்தார்.
தேவபிள்ளைகள் வாழ்ந்து சுகித்திருப்பதையே தேவன் விரும்புகின்றார் (3யோவான் 2).
“வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில்
நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும்,
உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும்
அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில்
பிதாவின் அன்பில்லை. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய
சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்”.
“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம்
உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின்
காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை
நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி”. “ஒவ்வொரு
கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும்
தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்” (பிர. 11:9, 12:14).
இது வாலிபர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மக்களும் பின்பற்றி நடக்க வேண்டிய சத்திய வார்த்தைகளாய் இருக்கின்றன.
* முதலில் எமது பலிபீடங்களை பரிசுத்த படுத்துவோம்.
* தேவனுகேற்றபடி எம்மை செம்மையாக்குவோம்
* பிறரையும் இதற்கென்று ஆயத்தபடுத்துவோம்.
ஜெப நேரங்களில் 5 அல்லது 10 நிமிடமாவது இலங்கைகாகவும், இலங்கையில்
பிசாசானவன் அநேகரை மயக்கி போட எய்துள்ள இது போன்ற பாலியல் அம்புகள்
முறியடிக்கபடவுமாக வேண்டி கொள்ளுவோம்.
தேவன் தாமே நம் ஜெபத்தை கேட்பாராக...
+ Comments + 3 Comments
I Like This News
God Bless Your
http://www.valibar.blogspot.com
God bless u too brother
good கட்டாயம் ஜெபிக்கணும் brother
http://kristhavan.blogspot.com/
Post a Comment