கடந்த இரண்டு பகுதிகளாக பார்த்த தானியேலும் இயேசுவும் பகுதியின் தொடர்ச்சியே இது.
2. இயேசு வெளிப்படுத்த படுகிறார்
2.1. மன்னிப்பு
தானியேல் புத்தகத்தில் வெளிப்படும் மிக முக்கியமான இயேசுவின் குணாதிசயமாக எனக்கு பட்டது மன்னிப்பு ஆகும். முரண்பட்ட இருதயத்தை உடைய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் முரண்பட்ட நடவடிக்கைகள் கண்டிப்பாக எவரையும் பொறுமையிழப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்று இருக்கும்.
ஆனாலும் தானியேலும் சரி அவனுடைய நண்பர்களும் அநேக இடத்திலே அமைதி காப்பதையும் ராஜாவை அவனது முரண்பட்ட நடவடிக்கைகளை தாண்டி ஏற்பதையும் காணலாம்.
2.2. தேவனுடைய மகிமைக்காக சாட்சியுள்ள வாழ்வு
தானியேல் புஸ்தகத்தை பொறுத்த வரையிலே கடின சூழ்நிலையிலே ஒரு சாட்சியான வாழ்வு வாழ்ந்த இளைஞர்களை பற்றியே நாம் பார்க்கிறோம். கண்டிப்பாக இயேசு இந்த இடத்திலே வெளிப்படுத்தப்படுகிறார் எனலாம்.
உதாரணமாக வேதத்தில் பார்த்தோமானால் இயேசு கூறுகிறார். “இவ்விதமாய் மனுசர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” என்று மத்தேயுவிலே குறிப்பிடுகிறார்.
பல இடங்களிலே இயேசுக்கிறிஸ்துவினுடைய வாழ்க்கை எப்படி தேவனை மகிமைப்படுத்தியதோ அதே வண்ணமாக தானியேல் மற்றும் அவனது நண்பர்களின் வாழ்க்கையும் அந்நியருக்கு முன்பாக தேவனுடைய நாமம் மகிமை பட காரணமாய் இருந்தது.
2.3. ஜெபம்
இயேசுக்கிறிஸ்து தன்னுடைய போதனைகளிலும் சரி தன்னுடைய வாழ்க்கையிலும் சரி ஜெபத்திற்கு ஒரு தனி இடமே வைத்து இருந்தார். மேலும் அதனை அநேக இடங்களில் செலுத்தும் தாக்கங்களும் வேதத்தில் பல இடங்களில் காணலாம். ஆனாலும் இயேசுவின் இப்பூவுலக நாட்களிலே ஜெபம் என்பதை மிக அழுத்தமான பிரதிபலிப்பிலே அநேக அடங்களிலே வெளிப்படுத்தி இருந்தார்.
இதே போலவே தானியேலும் அவனது நண்பர்களும் பல இடங்களிலே ஜெபிக்கின்றதை காண்கிறோம். தன் நண்பர்களோடு பிரச்சினைகளை பகிர்ந்து கொண்ட பின் “தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளை குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக” ஜெபிக்கின்றனர். மேலும் அநேக பகுதிகளிலே அவர்களது ஜெபப்பயணம் தொடர்கிறது. (தானி 6:1-12)
2.4. இலவசமாய்
அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து இதின் அர்த்தத்தை தெரிவிப்பேன். (தானியேல் 5:17)
இந்த இடத்திலே பார்த்தோமானால் தேவன் தனக்கு தந்த கொடையை தாலந்தை அவன் வெகுமானங்களுக்கோ, பரிசுகளுக்கோ அவன் விற்றுப்போட விரும்பவில்லை. மாறாக தேவன் தனக்கு வெளிப்படுத்தியதை அவன் ராஜாவிற்கு இலவசமாகவே அறிவிக்கிறான்.
இயேசுக்கிறிஸ்துவும் அவ்வாறே தான் தேவனுடைய ராஜ்ய வேலையை எதற்கும் விற்றுப்போடாதவராயும் இலவசமாக அனைவருக்கும் அனைத்தையும் செய்தார்.
உசாத்துணை நூல்கள்
1. பொடிக்குஞ்சு, தானியேல், மதுரை, வேர்ட் ஓப் கிறைஸ்ட் 2006
2. அஜித் பெர்னான்டோ, ஆண்டவர் இல்லா உலகில் ஆன்மிக வாழ்வு இலங்கை வேதாகம கல்லூரி வெளியீட்டு பிரிவு 2008
3. ஆபிரகாம் புத்தன் புரக்கல், தானியேல் தீர்க்கதரிசனம் ரேமா வெளியீடுகள் 2007

Post a Comment