பைபிளில் எழுதியிருக்கிறதா?

சில விஷயங்கள் தவறுகள் என்றும், அவைகள் தேவனுக்கு பிரியமானவைகள் அல்ல என்றும் கூறும் போது சிலர் கேட்கும் கேள்வி இவைகள் தவறுகள் என்று பைபிளில் எழுதியிருக்கிறதா? என்பதாகும். பைபிள் நேரடியாக ஒரு விஷயத்தை தவறு என்று சொல்லவில்லை என்பதற்காக அது செய்யத் தகுந்தது தான் என்று எண்ணிவிடக் கூடாது.

இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தவறுகளையும், பாவங்களையும் பைபிள் பட்டியல் போட்டுக் காட்டவில்லை. ஆனால் பைபிள் சத்தியங்களை படிக்கும் போது எது சரி எது தவறு என்று அறிந்துகொள்ள வாய்ப்பு கிட்டுகின்றது. சத்தியத்தை அறியும் போது பகுத்துணரும் தன்மை நம்மிடம் செயல்பட ஆரம்பிக்கிறது. எனவே வேதாகமத்தில் எழுதப்படாவிட்டாலும் ஒரு செயல் தவறா, சரியா என்பதை நம்மால் நிதானித்து அறிய முடியும். 

சில விஷயங்கள் நமக்கு தகுதியானதா, தகுதியற்றதா, நலமானத, நலமாற்றாதா என்பதையெல்லாம் அறிந்து கொள்ளத்தக்க புத்தியையும், அறிவையும் நமக்கு தேவன் தந்திருக்கின்றார். நல்லது கெட்டதுகளைப் பிரித்தறியும் படியாக தேவன் தந்திருக்கின்ற புத்தியையும் நாம் பயன்படுத்த வேண்டும். நமக்கிருக்கும் அறிவே ஒரு காரியத்தை தவறு என்றும் உகந்தது அல்ல என்றும் நமக்கு உணர்த்தும் போது பைபிளில் அப்படி எழுதவில்லை என்று கூறி அதைச் செய்வது நியாயாமல்ல. 

அது மட்டுமன்றி கர்த்தர் நமக்குப் பரிசுத்த ஆவியை தருகின்றார். எதற்காக இந்த பரிசுத்த ஆவி? இந்த பரிசுத்த ஆவி நமக்குள் கிரியை செய்யும் போது ஒரு செயல் சரியா, தவறா என்பதை நாமே நிதாநித்தரிய முடியும். எனவே பரிசுத்தாவியினால் சரி, தவறை நிர்ணயித்து உணரும் அனுபவத்திற்கு நாம் வர வேண்டும்.

("குற்றமுண்டு, குற்றமில்லையென்று..." ரோமர் 2:15)    
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved