மானிடர்களால் கூடாத ஒன்றை தேவன் செய்யத்த் திட்டமிடுகிறார் என்று காபிரியேல் தூதன் மரியாளிடம் கூறினான். ஒரு கன்னி ஒரு குழந்தையைப் பெற முடியாது என்பது அனைத்து மானிட நியாயமும், வாதமும் ஒத்துக்கொள்ளும். அது நடைபெற முடியாததாக தோன்றியது. எனினும், இது தான் திட்டவட்டமாக நடைபெறப் போவதாக இருந்தது. நடைபெற முடியாத ஒன்றை நடத்திக் காட்டுவாதாக தேவன் கூறும் போது அது ஒரு போது முட்டாள்தனமாகத் தோன்றாது. நடைபெற முடியாததாக தோன்றிய ஒன்றை உங்களுடைய வாழ்க்கையில் தேவன் கடைசியாக எப்போது செய்தார்? தேவன் செய்ய விரும்புகிற ஒன்றை உங்களோடு பேசியதன் மூலம் அதின் பெரிய தன்மையை குறித்து நீங்கள் மரண பயம் கொண்டது எப்போது?
தேவன் இன்னும் நடைபெற முடியாதவைகளாகத் தோன்றுகிறதை நடைபெறச் செய்கிறார். தேவன் விரும்புகிற எதையும் அவர் செய்ய வல்லவர் என்ற நம்பிக்கையை நாம் அடிக்கடி ஒத்துக்கொள்கிறோம்; ஆனால் இந்தக் காரியத்தை தேவன் எனக்காகச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை என்று ஒரு பாதுகாப்பான விதியை அதோடு இணைத்துக் கொள்கிறோம். தேவன் அற்புதங்களைச் செய்ய முடியும். ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையில் அற்புதத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்ற நம்பிக்கையில் நாம் நாத்திகர்களாக மாறிவிடுகிறோம்.
மானிடர் அனைவருக்கும் தேவன் இரட்சிப்பை கொண்டு வர விரும்பினார். தேவன் ஒரு அற்புதத்தை செய்ய வல்லவர் என்பதோடு மட்டுமல்ல, தன மூலமாக அவர் செய்ய திட்டமிட்டிருந்த அந்த ஆச்சரியமான கிரியைக்கு தன்னுடைய வாழ்க்கையை மாற்றவும் செய்தார் என்பதை மரியாள் நம்பினால். ஒரு கிறிஸ்தவனுக்கும், உலக ஒழுக்க விதிகளை பின்பற்றுகிற ஒருவருக்கும் இடையில் உள்ள மாறுபாடு தெயவீகமாகவே இருக்கிறது. ஒரு சபைக்கும், ஒரு சமூக அமைப்புக்கும் உள்ள மாறுபாடு அற்புதமாகவே இருக்கிறது. ஒரு கிறிஸ்தவனின் ஒழுக்கத்தை சிலர் போலியாக்க முடியும். ஆனால் கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அற்புதங்களை ஒருவரும் உருவாக்கி காட்ட முடியாது. தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

- "தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை" லூக்கா 1:37