பாவத்தின் மீது வெற்றி ......

பாவத்தின் நிமித்தம் தேவன் எதிர்பார்த்த பூரணத் தன்மையில் ஆதாமும், ஏவாளும் குறைவுபட்டுப் போனார்கள். தேவனுடைய பரிசுத்த தேசம் என்ற மகிமையை அனுபவிப்பதை இஸ்ரவேலர்கள் பாவத்தின் நிமித்தம் தவறவிட்டுவிட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்க கூடிய தகுதியை யூதாஸ் பாவத்தின் நிமித்தம் இழந்து போனான்.

பாவம் தொடுகிற எந்த இடமும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கரையுள்ளதாக ஆக்கி விடும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பாவத்தின் அழிவினால் பாதிக்கப்படக்கூடும். 

பாவத்தை தேவன் முழுமையாக முறியடித்தார் என்பதே இரட்சிப்பின் அற்புதமாக இருக்கிறது. நாம் செய்ய முடியாததை அவர் செய்தார். கிறிஸ்துவின் தியாகப்பலியின் மூலமாக தேவன் தம்முடைய கிருபையினால், தன்னுடைய இரட்சிப்பை நமக்கு வழங்கினார், நம்முடைய பாவத்தின் தண்டனையை முற்றிலுமாக நீக்கிப் போட்டார். அவருடைய கிருபையினால் தேவனுடைய மகிமைக்கு குறைவாக மாறிவிட்ட நம்முடைய வாழ்க்கைக்கு உயிர் கொடுத்து அதற்கொரு பொருளையும் கொடுத்திருக்கிறார். நாம் நம்முடைய பாவங்களை உடனடியாக அறிக்கை செய்து எல்லா அநீதியுலும் இருந்து கழுவப்படும்படி தேவன் வாய்ப்பை வழங்குகிறார் (1 யோவான் 1 :9). முறிந்து போன இருதயத்தை அவர் கட்டுகிறார். கோபத்தையும், கசப்பையும் அவர் கிருபை அழிக்கிறது. அறுந்து போன உறவுகளை அவர் சீர்ப்படுத்துகிறார். பாவத்தினால் அழிந்து போன ஒரு வாழ்க்கையை சீர்ப்படுத்தி அதை முழுமையாக்குகிறார், நம்முடைய தோல்விகளை அவர் கையில் எடுத்துக் கொண்டு அவற்றை அவர் நன்மையாக மாற்றுவார். 

பாவத்தின் அழிவை தேவன் ஒருவர் மட்டுமே சீர்ப்படுத்த முடியும். அவருடைய மகிமைக்கும், உங்களுடைய பாவத்திற்கும், இடையில் உள்ள தடையை அவர் சீர்பொருந்தச் செய்யமுடியும் (ரோமர் 3 :23). அவர் அவ்வாறு செய்வார் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். அவரிடம் நீங்கள் மன்றாடினால் பாவத்தின் கட்டுகளில் இருந்து அவர் உங்களை விடுவிப்பார். அவரோடு உள்ள உங்கள் உறவை சீரமைப்பார், உங்களை முழுமைப்படுத்துவார்.     

    "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்."(ரோமர் 3:23-26)
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved