கிறிஸ்தவத்தின் வரலாறு....(05) (தொடர்ச்சி)

பல்கேரிய மரபுவழி தேவாலயம்
1235
மரபுவழி குருமார்களால் பல்கேரிய மரபுவழி திருச்சபை  உருவாக்கப்பட்டது.

1245-1274
Summa theologica மற்றும் summa contra gentiles எனும் நூல்களுடன் சேர்த்து என்பதிற்கும் அதிகமான புத்தகங்கள் தோமஸ் (Thomas aquinas) என்பவரால் எழுதப்பட்டது. 

1375
மரபுவழி குருமார்களால் செர்பியன் மரபுவழி திருச்சபை  உருவாக்கப்பட்டது.

1382
வேதாகமம் ஜான் வய்க்ளிப்(ஒக்ஸ்போர்ட் பேராசிரியர்)என்பவரால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. முதலாவது பிரதி -1382 இலும் பின்பு இரண்டாவது பிரதி-1384 (அவரது மரணத்திற்கு பின்பு)

1389
புனித உடற்போர்வை, (தூரின் நகர உடற்போர்வை) முதல் முறையாக காட்சிப் படுத்தப்பட்டது. 

1448
ரஷ்யர்களால் ரஷ்ய மரபுவழி தேவாலயங்கள் நிறுவப்பட்டது.
ரஷ்யாவின் பிரதான குருவாக ஜோனாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

1453
கான்ஸ்டான்டினோபிள் இன் வீழ்ச்சியிலிருந்து மரபுவழி திருச்சபைகள் தப்பிப் பிழைத்தல்.

1455
ஜோஹான் (Johann Gensfleisch zur Laden zum Gutenberg) என்பவரால் வல்கேட் விவிலியம் பிரதி செய்யப்பட்டது.

1498
புதிய கிறிஸ்தவர்கள் தர்க்கத்திற்கு இடமளிப்பவர்களாக மாறினர். அரசியல்
ரீதியாகவும் பணபலத்திலும் தமது செல்வாக்கை கட்டியெழுப்பினர்.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் 
1492
கொலம்பஸ் அமெரிக்காவை வந்தடைந்தார். அடுத்த 3 ஆண்டுகளில்
ஜரோப்பியர்கள் அமெரிக்க குடியிருப்புகளை மேற்கொண்டனர்.
சமய வரம்பு எல்லையையும் சுதந்திரத்தையும் விஸ்தரிப்பதே இதற்கான காரணங்களாகும்.

1508-12
மைக்கலாஞ்சலோ என்பவரால் விவிலிய நிகழ்வுகள், இயல்புகளை தத்ரூபமாக உணர்த்தும் வகையில் படம் வரையப்பட்டது (The celing of the sistine chapel in the vatican). இவ் வர்ணசித்திரங்கள் 500 வருடங்களிற்கு பின்பும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் உயர்ந்தவையாக காணப்பட்டன.

சீர்திருத்த காலப்பகுதி.

1516
இக்காலத்தில் ஜிவின்க்லி(Zwingli) என்பவர் நற்செய்திப்பிரசங்கம் செய்யத் தொடங்கினார். பின் இவர் சுவிஸ்லாந்து  இலுள்ள Einsiedeln எனும் இடத்தில் உள்ள தேவாலயத்தில் போதகராக பொறுப்பேற்றார். இங்கு தமது பிரசங்கம் மூலம் நற்செய்தியைப் பரப்பினார்.
இச் சீர்திருத்தமானது தேவாலயத்திலும் நாட்டிலுமிருந்து பிரிந்து அஹிம்சை
ரீதியாக நடைபெற்றது. சுவிஸ் ப்ரேத்றேன் போன்ற இவரது பின்பற்றாளர்களே பின்பு Anabaptists, Mennonites, Quakers போன்றவற்றின் எழுச்சிக்கு உதவினர்.

1517 oct 31
மார்ட்டின் லூதரின் மறுசீரமைப்பு.
இவர் விவாதம் ஒன்றிற்கான அழைப்பை குறிப்பிட்ட சில மதகுருமார்களுக்கு விடுத்தார்.  இவ் விவாதம் 95 கட்டுரைகளை மூலாதாரமாக கொண்டிருந்தது.
இவ்விவாதம் உரோமன் கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்த குழுவினரின்
செயற்பாடுகளையும் கோட்பாடுகளையும் பற்றிய பரந்த கலந்துரையாடலாக
உருப்பெற்றது. இது புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் எனப்பட்டது.

1521 may 25
புனித உரோம பேரரசனால் லூதரன்சினரை நாடு கடத்த பிரகடனப்படுத்தப்பட்டது. லூதரன்சினரையும் அவரது குழுவினரையும் (Who called themselves evangelicals)  சமய பேதமுள்ளவர்களாகவும் குற்றவாளிகளாகவும் கருதப்பட்டனர். இவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மார்டின் லூதர் 
1523
சுவிஸ்லாந்தின் மறுசீரமைப்பு தொடர்பான 67 கட்டுரைகளை ஜிவின்க்லி (Zwingli) பிரசுரம் செய்தார்.

1525 jan 1
முதலாவது 'வயது வந்தவர்களுக்கான திருமுழுக்கு' ஆரம்பமானது. பைபிளின் படி வயது வந்தவர்களுக்கு மாத்திரமே திருமுழுக்கு வழங்க வேண்டும் எனவும் குழந்தை பருவத்தில் திருமுழுக்குவழங்குவது தவறு எனவும் கருதப்பட்டது. புரட்டஸ்தாந்து மரபில் முதலாவது திருமுழுக்கு வழங்கப்பட்டது Anabaptist (மறு ஞானஸ்நான கோட்பாடு) பிரிவினருக்கு ஆகும்.

1523
வில்லியம் (William Tyndale) என்பவரால் பைபிளின் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இவருடைய பைபிள் வெளியிடப்பட்டு குறுகிய காலத்திலேயே தடை செய்யப்பட்டாலும் உத்தியோக பூர்வமற்ற முறையில் பரந்த அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மன்னன் எட்டாவது ஹென்றி
1527
மன்னன் எட்டாவது ஹென்றி  இனால்  இங்கிலாந்தில் திருச்சபை ஆரம்பிக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னன் எட்டாவது ஹென்றி இன் வாரிசுக்காக அவனது மனைவி கதரின் -Catherine(Argon)ஐ விவாகரத்து
செய்து விட்டு ஆன் போலின் (Ann Boleyn) என்பவரை திருமணம் செய்ய முடிவெடுத்தான். எனினும் எட்டாவது பாப்பரசர் கிளெமென்ட் (Pope Clement
8) இதனை மறுத்தார். இதனால் மன்னன் எட்டாவது ஹென்றி முறையாக கத்தோலிக்க திருச்சபையை விட்டு விலகி திருச்சபை ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்தார். தன்னைத் தானே அத்திருச்சபையின் உயர்தலைவராகவும்
Canterbury யின் தலைவராகவும்,  சிரேஷ்ட மதகுரு ஆகவும் உயர்த்திக்கொண்டார். இத் திருச்சபையே புரட்டஸ்தாந்து மரபிலுள்ள அங்கிலிக்கன் பிரிவினை வளர்த்தது.

1529 Apr 19
கத்தோலிக்கர் தமக்கு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டவரை புரட்டஸ்தாந்தினர் என அழைத்தனர்.

1530 jun 25
"Ausburg உடன்படிக்கை" லூதரன் குழுவினால் மன்னன் ஐந்தாவது சார்ல்ஸ் (Charles 5) இடம் முன்வைக்கப்பட்டது. (ரோம பேரரசு)

1536
ஜான் கால்வின் (John Calvin) என்பவரால் "Calvinist" பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. "Anabaptist" அத்துடன் "Baptist" பிரிவும் இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக
காணப்பட்டது. 

1531
ஸ்பானிய மருத்துவரும் இறையியலாளருமான மிகுவேல் என்பவரால் "In De Trinitatis Erroribus" (திரித்துவத்தின் தவறுகள்) எனும் புத்தகம் வெளியிடப்பட்ட து.

1553 
பிதா சுதன் பரிசுத்த ஆவி மூவரும் ஒன்று என்ற நம்பிக்கை
பிரகடனப்படுத்தப்பட்டது. (மூவொரு இறைவன்)

1536
Menno simons, Anabaptist தலைவர்களால் (முதல் தலைமுறையால்)
முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளை சேகரித்து இணைத்தார். இவரது பின்பற்றுனர்கள் "Mennonities" என அழைக்கப்பட்டனர்.

1538
ஜான் கால்வின் (John Calvin), ஸ்டார்ஸ்போர்க் (Strasborg) எனும் இடத்திற்கு (ஜேர்மன்) பயணம் செய்து  அங்குள்ள பிரான்சிய புரட்டஸ்தாந்தினரை சந்தித்தனர். புரட்டஸ்தாந்திய மறுசீரமைப்பு ஜேர்மனியில் ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே பிரான்சிற்குள் நுழைந்தது.
வல்கேட் விவிலியம்
1546
உரோமன் கத்தோலிக்க திருச்சபையால் பிரயோகிக்கப்படும் மொழிபெயர்ப்பாக வல்கேட் விவிலியம் விளங்கியது.

1546-55
புனித உரோமானிய மன்னன் ஐந்தாவது சார்ல்ஸ், லூதரனிசம் கொள்கையினரான ஜேர்மனியினருக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் மன்னன் ஐந்தாவது சார்ல்ஸ் இனால் அவர்களை கத்தோலிக்கத்திற்கு மாற்றமுடியவில்லை.  இப்போர் பின்னர் "schmalkaldic war" என அழைக்கப்பட்டது.

1549
அங்கிலிக்கன் பேராயர் தோமஸ்(Thomas cranmer) என்பவரால் "பொது பிரார்த்தனை" புத்தகம் வெளியிடப்பட்டது.  இது இங்கிலாந்து திருச்சபை கத்தோலிக்க பாரம்பரியத்திலிருந்து புரட்டஸ்தாந்து பாரம்பரியத்திற்கு நகர்வதற்கு காரணமான ஆவணமாக இருந்தது.

1555 sep 25
உரோம பேரரசில் உள்ள ஒவ்வொரு அரசனும் தமது நாட்டிற்கு என தாமே
உத்தியோகபூர்வ சமயத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டது. (catholicism
or lutheranism) நாட்டின் சமயத்தைப் பின்பற்றாதவர்கள் அவர்களது சொத்தை
விற்று விட்டு அமைதியாக நாட்டை விட்டு வெளியேறலாம் என கூறப்பட்டது.

1557-1560
புரட்டஸ்தாந்திய சீர்திருத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆரம்ப
மொழிபெயர்ப்பாக "Geneva bible" காணப்பட்டது. இது உதவிகள், வரைபடங்கள்,
விளக்கங்கள், குறிப்புகள் என்பவற்றையும் உள்ளடக்கியிருந்தது. இது 'King
James' பதிப்பிற்கு 51 வருடங்கள் முன்பாக வெளியிடப்பட்டது.
ஜான் கால்வின்
1559
பிரான்சிய புரட்டஸ்தாந்தினரால் "நம்பிக்கையின் உடன்படிக்கை" வெளியிடப்பட்டது. இப்பிரிவானது கத்தோலிக்கருக்கும்
பிரான்சியருக்குமிடையிலான பல உள்நாட்டு யுத்தங்களை வளர்த்தது.
(1562-1643)

1560
ஜான் கால்வின் (John Calvin) இன் மாணவரான ஜான் க்னாக்ஸ் (John knox) என்பவர் "ஸ்காட் உடன்படிக்கை" யின் காரண கர்த்தாவாக விளங்கினார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved