பழைய ஏற்பாட்டில் உள்ள பெரிய தீர்க்கதரிசன புத்தகங்களிலே “தானியேல்” தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய புத்தகமாக திகழ்கிறது. வேதபுத்தகங்களிலே ஒரு எச்சரிப்பின் நற்செய்தியை அறிவிக்கும் முக்கிய புத்தகங்களாக வெளிப்படுத்தல் மற்றும் தானியேல் புத்தகங்கள் திகழ்கின்றன.
தீர்க்கதரிசனமாக ஒரு புறம் இந்த புத்தகம் வெளிப்படுத்தல்களை மேற்கொண்டாலும் போராட்டம் நிறைந்த உலகில் தேவனுடைய பிள்ளைகளின் கிரியைகள், தேவனுடைய மகத்துவமான கிரியைகள் இராஜாக்களையும் தேவனுடைய பக்கம் திருப்பிய அதிசய கிரியைகள் என இந்த கால ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் படிக்க வேண்டிய புத்தகமாய் மாறி உள்ளது என்பதை மறுக்க இயலாது.
பழைய ஏற்பாட்டிலே தானியேல் புத்தகம் காணப்பட்டாலும் இதிலே இயேசு வெளிப்படுகிறார் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் அறிவோம். இதனை இந்த பகுதியிலே இரு தலைப்பிலே பார்ப்போம்.
1. இயேசு தன்னை வெளிப்படுத்தியது
2. இயேசுவை மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தியது.
தானியேல் கண்டிப்பாக உலகம் இருக்கும் சர்வ காலங்களுக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்விலும் சவால்களை தோற்றுவிக்கும் புத்தகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
1. இயேசு வெளிப்படுகிறார்
1.1. இயேசு இரட்சிப்பவராக வெளிப்படுகிறார்
“அதற்கு அவன்: இதோ நாலுபேர்; விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்: அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை: நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.” (தானியேல் 3:25)
இந்த சம்பவம் கண்டிப்பாக கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சி என்பதை யாவரும் அறிவோம். அது எந்த வகையில் என்று பார்த்தால் தப்பிக்க வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் முரண்பாட்டின் மனதினனாய் இருக்கும் நேபுகாத்நேச்சார் போன்ற ராஜாவின் ஆட்சியில் தானியேலுக்கும் அவனது நண்பர்களுக்கும் வழங்கப்பட்ட தண்டனை. இங்குள்ள சூழ்நிலையில் இயேசு இரட்சிப்பவராக இங்கே தோன்றுகிறார்.
இந்த சூழ்நிலையை 4 படிகளில் பார்த்தோமானால்
1. சிலை, சுரூபம் உண்டாக்கப்படுகிறது.
நேபுகாத்நேச்சார் ஒரு சிலையை பண்ணுகிறான். அந்த சிலை வணங்கப்பட வேண்டுமென்று உத்தரவு இடுகிறான்.
2. வாழ்க்கை அச்சுறுத்தலாக காணப்படுகிறது.
அந்த சிலையை எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற் போனால் அவன் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கிறான்.
3. கட்டளைக்கு கீழ்படியாத மீதியானவர்கள்
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி ஏற்படுத்த பட்ட சாத்ராக், மேசாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுசர்கள் ராஜாவாகிய நேபுகாத்நேச்சரை மதிக்கவில்லை. அவர்கள் அந்நிய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், ராஜா நிறுத்தின பொற் சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தார்கள்.
4 உலகம் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஆக்கினையை தீர்ப்பாக்கிறது
அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேசாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டு சூளையைச் சாதாரணமாய் சூடாக்குவதை பார்க்கிலும் ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும் படி உத்தரவு கொடுத்து, சாத்ராக், மேசாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும் படி தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்ளையிட்டான்.
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
5. இயேசுவானவர் இரட்சிக்கிறவராக வருவார்
நேபுகாத்நேச்சார் பார்க்கையில் இதோ நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்: அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை: நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
இந்த இடத்திலே தனக்காக வாழ்ந்த தன்னை விட மற்ற தேவர்கள் எனப்பட்டவர்களை அற்பமாக எண்ணிய தன்னுடைய பிள்ளைகளாகிய தானியேல் மற்றும் அவர்கள் நண்பர்களுக்காகவும் இயேசு தன்னை இரட்சிக்கிறவராக வெளிப்படுத்துகிறார்.
அடுத்த பகுதியில் இயேசு தன்னை வெளிபடுத்தும் ஏனைய பகுதிகளை பார்ப்போம்.

Post a Comment